விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது ஆனால் அனைத்து சீரியல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பு பெறுகின்றதா என்று கேட்டால் ஒரு சில சீரியல் மட்டும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெறுகிறது அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் கோடிக்கணக்கான ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த சீரியல் தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலை பார்க்காத ரசிகர்களே கிடையாது அந்த அளவு இந்த சீரியலுக்கு ரசிகர் பட்டாளம் அதிகம்.
இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்தவர் தான் செந்தில் இந்த தொடரின் மூலம் செந்தில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் இழுத்தார் செந்தில் முதன்முதலாக ரேடியோ மிர்ச்சியில் ஆர் ஜே வாக தான் தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கினார் அதன் பிறகு தவமாய் தவமிருந்து, செங்காத்து பூமியிலே, கண் பேசும் வார்த்தைகள், வெண்ணிலா வீடு என பல படங்களிலும் நடித்துள்ளார் ஆனால் சினிமாவில் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்காததால் சின்னத்திரையை நோக்கி பயணம் செய்தார்.
பின்பு சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடிக்க ஆரம்பித்தார் அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஸ்ரீஜாவிற்கும் செந்திலுக்கும் காதல் மலர்ந்தது பின்பு சீரியலில் இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பது போல் நிஜ வாழ்க்கையிலும் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என பலரும் ஆசைப்பட்டார்கள் அப்படித்தான் 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் திருமணம் செய்து கொண்ட பிறகு மாப்பிள்ளை என்ற தொடரிலும் நடித்தார்.
அதுமட்டுமில்லாமல் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரிலும் செந்தில் நடித்திருந்தார் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு எட்டு வருடங்கள் ஆகிய நிலையில் இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்து வந்தார்கள் இப்படிப்பட்ட ஒரு நிலையில் ஸ்ரீஜா கர்ப்பமாக இருக்கிறார் என செந்தில் நமது சந்தோஷத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். வளைகாப்பு விழா நடைபெற்றதையும் புகைப்படத்துடன்வெளியிட்டார்கள்.
தற்பொழுது இவர்கள் இருவருக்கும் குழந்தை பிறந்துள்ளது இந்த நிலையில் செந்தில் குமாரின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக வருகிறது அதில் செந்தில்குமார் ஸ்ரீஜா நடித்த சரவணன் மீனாட்சி சீரியலில் ஏலேலோ என்ற பாடல் வரும் சரவணன் மீனாட்சி சீரியல் மிகப்பெரிய ஹிட் அடைந்ததற்கு இந்த பாடலும் ஒறு காரணம் இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் யார் என்று செந்தில் தன்னுடைய மனைவி ஸ்ரீஜாவிடம் கேட்கிறார்.
அதற்கு உடனே இளையவன் என்று கூறுகிறார் ஸ்ரீஜா அதற்கு செந்தில் தவறு எங்கேயும் எப்போதும் கோவா போன்ற படங்களில் பணியாற்றிய சத்யா தான் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார் என கூறியுள்ளார் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாக வைரலாக வருகிறது.