தமிழ் சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி இருக்கும் ஏராளமான நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு இருந்து வருகிறது. அந்த வகையில் சரியாக சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும் சோசியல் மீடியாவில் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். மேலும் இதனை அடுத்து சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை வைத்துக்கொண்டு அதில் தங்களது அன்றாட வாழ்வில் நடக்கும் ஏராளமான தகவல்களை பகிர்ந்து வருவதனை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
இவ்வாறு எப்பொழுதும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருவதனால் இவர்களுக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகிவிடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவியில் நடித்து வந்த பிரபல நடிகை ஜீ தமிழின் புதிய சீரியலில் கமிட்டான நிலையில் சில நாட்களிலேயே வெளியேறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொடர்ந்து ஏராளமான புது சீரியல் அறிமுகமாகி வருகிறது அந்த வகையில் தற்பொழுது விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியல் புகழ் ரியா விஸ்வநாதன் நடிப்பில் சண்டக்கோழி என்ற புதிய சீரியல் தொடங்கி இருக்கிறது. இதனை அடுத்து மேலும் விரைவில் ஜீ தமிழில் புத்தம் புதிய சீரியல் ஒன்றில் விஜய் டிவி நடிகை சரண்யா துராடி நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
மேலும் இந்த சீரியல் காதல் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இருப்பதாகவும் இந்த சீரியலில் இவர் கமிட்டாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் கதாநாயகி ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால் சரண்யா என்னால் அம்மாவாக நடிக்க முடியாது என சொல்லி இந்த சீரியலில் இருந்து விலகி இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. சரண்யாவிற்கு தற்பொழுது 35 வயது ஆகும் நிலையில் அம்மாவாக நடிப்பது ஒன்றும் தவறு இல்லை ஆனால் இவர் இந்த சீரியலில் இருந்து விலகி இருப்பது ரசிகர்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது.