லெஜன்ட் ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள். தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து உள்ளார். இவர் முதலில் தனது கடை விளம்பரங்களில் நடித்து வந்தார் பிறகு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது அவருடைய ஆசை. இந்த சமயத்தில் தான் ஜெடி, ஜெர்ரி இயக்குனர்கள் சொன்ன கதை சரவணன் அருளுக்கு..
ரொம்ப பிடித்து போகவே மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் “தி லெஜன்ட்” என்னும் படம் உருவானது ஹீரோவாக சரவணன் அருள் நடித்தார் அவருடன் இணைந்து படத்தில் ஊர்வசி ரவுத்தேலா, விஜயகுமார், பிரபு, விவேக், யோகி பாபு, மயில்சாமி, ரோபோ ஷங்கர் என பல திரைப்படங்கள் நடித்திருந்தனர்.
படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடியது சில மாதங்கள் கழித்து OTT தளத்திலும் வெளியாகி சக்க போடு போட்டது இந்த படத்தை தொடர்ந்து உடல் எடையை குறைத்து புதிய லுக்கியில் சரவணன் அருள் தென்படுகிறார் இதை பார்த்த பலரும் அவர் அடுத்த படத்திற்காக ரெடி ஆகி வருவதாக பலரும் கூறி வருகின்றனர்.
சமீபகாலமாக நடிகர், நடிகைகளின் சொத்து மதிப்பு குறித்து பார்த்து வருகிறோம் அதன்படி சரவணன் அருளின் சொத்து மதிப்பு குறித்தும் நமக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கிறது அவருடைய சொத்து மதிப்பு சுமார் 750 மில்லியன் டாலர் என கூறப்படுகிறது இந்திய மதிப்பில் 6177 கோடி என சொல்லப்படுகிறது.
நடிகர் ஷாருக்கான் சொத்து மதிப்பை விட சரவணன் அருள் அவர்கள் சொத்து மதிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது ஷாருக்கானின் சொத்து மதிப்பு சுமார் 730 மில்லியன் இந்திய மதிப்பில் 6,142 கோடி என கூறப்படுகிறது. விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர்.