வியாபாரத்தில் கொடி கட்டி பறந்து வரும் நிறுவனம் சரவணா ஸ்டோர் அதன் உரிமையாளர் சரவணன் அருள் தனது கடை விளம்பரத்திற்காக முதலில் நடித்து வந்த அவர் தற்பொழுது சினிமாவுலகில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். ஜேடி -ஜெர்ரி இயக்கத்தில் சரவணன் அருள் நடிப்பில் வெளியாகி வெற்றி நடை கொண்டு வரும் திரைப்படம் தி லெஜன்ட்.
இந்த படம் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகியது மேலும் தமிழை தாண்டி நான்கு மொழிகளில் படம் ரிலீஸ் ஆகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சரவணன் அருளுடன் கைகோர்த்து நாசர், பிரபு, மயில்சாமி, யோகி பாபு, விவேக், ஊர்வசி ரவுத்தேலா மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்து அசத்தி உள்ளனர்.
படம் ரசிகர்கள் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. முதல் நாளில் மட்டுமே ஒரு கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் நல்ல வசூலையும் அல்ல தொடங்கி உள்ளது. இதனால் படகுழு சற்று நிம்மதி அடைந்துள்ளது.
இப்படி இருக்கின்ற நிலையில் சரவணா ஸ்டோர் ஓனர் சரவணன் அருள் புகைப்படங்கள் பெரிதும் வெளியாகி வைரலாகி வருவது வழக்கம். ஆனால் அவரது குடும்பம் பற்றிய புகைப்படங்களோ செய்தியோ வெளி வராது இப்படி இருக்கின்ற நிலையில் சரவணன் அருள் மகள் திருமணம் நடைபெற்ற பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று..
இணையதள பக்கத்தில் தற்போது வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஹீரோயின் போல் இருக்கிறார் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். சரவணன் அருள் மகள் கல்யாணத்திற்கு அரசியல்வாதிகள் சினிமா பிரபலங்கள் பலர் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ சரவணன் அருள் மகள் இருக்கும் அந்த புகைப்படம்.