புதிதாக ஹீரோவாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகுபவர் லெஜண்ட் சரவணன். இவர் தற்பொழுது ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவருக்கு ஜோடியாக எந்த கதாநாயகி நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
லெஜெண்ட் சரவணன் சென்னையில் உள்ள சரவணா ஸ்டோரின் உரிமையாளர் ஆவார்.இவர் தற்பொழுது ரூபாய் 200 கோடி பட்ஜெட்டில் திரைப்படம் ஒன்றை தயாரித்து வருகிறார். இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனரான ஜேடி ஜெர்ரி இயக்கி வருகிறார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
இப்படத்தில் ஹரிஷ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார்.இவர்களைத் தொடர்ந்து வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், ரூபன் எடிட்டராகவும் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் சுறுசுறுப்பாக சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி யார் என்று தெரியாமல் புரியாத புதிராகவே இருந்து வந்தது.இந்நிலையில் தற்போது கதாநாயகியாக பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஊர்வசி ரௌட்டாளா நடிப்பது உறுதியாகி உள்ளது.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் இவர் கலந்து கொண்டு வெற்றிகரமாக படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாம்,இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது அதிலும் ஊர்வசி ரௌட்டாளா கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
இப்படத்தில் ஊர்வசி ரௌட்டாளா ஐஐடியில் பணிபுரியும் மைக்ரோபயாலஜிஸ்ட கேரக்டரில் நடித்து வருவதாகவும் இப்படம் அறிவியலை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
அது மட்டுமல்லாமல் இப்படம் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழி திரை உலகிலும் உருவாக்கப்பட்டு டைட்டிலுடன் கூடிய போஸ்டர் விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்கள். அது மட்டுமல்லாமல் இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.