90,80 கால கட்டங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சரத்குமார். ஆரம்பத்தில் ஹீரோ, வில்லன், குணத்திர கதாபாத்திரம் என அனைத்திலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து வந்த சரத்குமார் இப்பொழுது வயது முதிர்வின் காரணமாக டாப் ஹீரோக்களின் படங்களில்..
சித்தப்பா, அப்பா, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என தன்னை தேடி வரும் நல்ல கதாபாத்திரங்களில் நடித்தது ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருகிறார் கடைசியாக கூட வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு அப்பாவாக நடித்து அசத்தினார் அதனை தொடர்ந்து பல்வேறு புதிய படங்கள் நடித்து வருகிறார் இப்படி இருந்தாலும்..
சரத்குமார் கேரியரில் மிக முக்கியமான படமாக இன்று வரை பேசப்படுவது 1992 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான “நாட்டாமை” திரைப்படம் தான் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த ஒரு படமாக உருவாகியது.
படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் அவருடன் இணைந்து குஷ்பு, மீனா, விஜயகுமார், பொன்னம்பலம் என பலர் நடித்திருந்தனர் படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் சரத்குமார் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து அண்மையில் பேட்டி ஒவ்வொன்றில் கே எஸ் ரவிக்குமார் வெளிப்படையாக கூறினார்.
அதில் அவர் சொன்னது.. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் மொத்தம் 50 லட்சம் அதில் சரத்குமார் 5 லட்சம் சம்பளமாக வாங்கினார் என கூறினார். மேலும் பேசிய அவர் இந்த படத்தில் சரத்குமாருக்கு அப்பாவாக நடித்த விஜயகுமார் சுமார் 2 லட்சம் சம்பளம் வாங்கியதாகவும் கூறினார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.