வாரிசு திரைப்படத்தில் நடிக்க “சரத்குமார்” வாங்கிய சம்பளம் – இத்தனை கோடியா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்

sarathkumar-
sarathkumar-

இந்த ஆண்டு விஜய்க்கு நல்ல ஆண்டாக அமையும் என சொல்லப்படுகிறது. இப்போ லியோ படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படி இருந்தாலும் இந்த வருஷத்தின் முதலிலேயே பொங்கலை முன்னிட்டு விஜயின் வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது.

தெலுங்கு வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக இருந்தது. படத்தின் கதைக்கு ஏற்றவாறு விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, பிரபு, யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ் என பலரும் சூப்பராக நடித்திருந்தனர்.

வாரிசு படத்தை முதலில் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள் பிறகு ஒரு வாரம் கழித்து மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக தனது குழந்தைகளுடன் வந்து படத்தை பார்த்ததால் படத்திற்கான வரவேற்பு பெரிய அளவில் இருந்தது. இதனால் தமிழையும் தாண்டி தெலுங்கு, கேரளா, போன்ற இடங்களிலும், வெளிநாடுகளிலும் வசூலும் பட்டையை கிளப்பியது.

இதுவரை மட்டுமே விஜயின் வாரிசு திரைப்படம் சுமார் 300 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற தகவலும் அவ்வப்போது நாம் பார்த்து வருகிறோம்..

வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு அப்பாவாக நடித்த சரத்குமார் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது அதன்படி பார்க்கையில் வாரிசு படத்தில் நடிக்க நடிகர் சரத்குமார் சுமார் 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி நடித்தாராம். இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.