தமிழ் சினிமா உலகில் இன்று தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ சரத்குமார் இவர் ஆரம்பத்தில் குணசித்திர கதாபாத்திரம், வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் திடீரென ஹீரோவாக அவதாரம் எடுத்தார் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்ததால் ரசிகர்கள் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டினர்.
அதோடு மட்டுமல்லாமல் இவருக்கு செல்லமாக சுப்ரீம் ஸ்டார் என பெயர் வைத்தனர். அதன் பிறகு வெற்றி நாயகனாக வலம் வந்தார் இப்படிப்பட்ட சரத்குமார் தற்போது வயது மூதேர்வின் காரணமாக டாப் ஹீரோக்களின் படங்களில் அப்பா, சித்தப்பா, வில்லன் மற்றும் குணச்சத்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
கடைசியாக கூட பொன்னியின் செல்வன் , வாரிசு படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்த கைத்தட்டல் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபக்கம் இருந்தாலும் அவ்வபோது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறார் அண்மையில் கூட சூதாட்ட விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார் இது பெரும் சர்ச்சையாக விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சரத்குமார் ஒரு நடிகையின் வீடியோவை திரும்ப திரும்ப பார்த்த சம்பவம் தற்போது சமூக வலைதள பக்கத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. ஏய் படத்தில் சரத்குமார் செய்த சேட்டைகள் குறித்து அவருடன் பணியாற்றி உள்ள பிக்பாஸ் பிரபலம் அபிஷேக் தெரிவித்துள்ளார் முதலில் அபிஷேக் பற்றிய சரத்குமார் பேசுகையில் அவன் தங்களை சூட்டிங் ஸ்பாட்டில் நடிக்கவே விடல என கூறினார்.
இதை அடுத்து அபிஷேக் நீங்களும் நானும் சூட்டிங் ஸ்பாட்டில் நமிதாவின் அர்ஜுனா அர்ஜுனா வீடியோ சாங் திரும்பத் திரும்ப போட்டு பார்த்ததை சொல்லட்டுமா என கேட்டவுடன் ஷாக் ஆகி போன சரத்குமார் அப்படியே சைலண்ட் மோடுக்கு சென்று விட்டார். அபிஷேக் சொன்ன அந்த வீடியோவை எதுவும் அல்ல.. ஏய் படத்தில் இடம்பெற்றுள்ள அர்ஜுன் அர்ஜுனா பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.