தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தேதிகழ்ந்து வந்தவர் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு கதாநாயகியாக மாறிய இவர் தமிழ் சினிமாவிலும் மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார்.
அதுமட்டுமில்லாமல் நடிகை மீனா அவர்கள் 80 மற்றும் 90களில் இருந்த முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படத்திலும் நடிகை மீனா ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இந்த நிலையில் நடிகை மீனா அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்த நேரத்தில் நடிகர் சரத்குமார் நடிகை மீனாவை பெண் கேட்டு அவருடைய வீட்டிற்கு சென்று இருக்கிறார் அப்போது மீனாவின் அம்மா இப்பதான் சினிமாவில் என்னுடைய மகள் வளர்ந்து கொண்டு இருக்கிறார் அதனால அவரை வளர விடுங்கள் அவரை தொந்தரவு செய்யாதீர்கள் என்று கூறி இருக்கிறார் மீனாவின் தாய்.
இதைக் கேட்ட சரத்குமார் அமைதியாக சென்றுவிட்டார். இந்த உண்மையை நடிகரும் விபச்சகருமான பிரபல சினிமா பிரபலம் ஒருவர் தனது youtube சேனலில் தெளிவாக கூறியிருக்கிறார் அதுமட்டுமல்லாமல் நடிகை மீனா பற்றி இதுவரைக்கும் எந்த ஒரு தவறான செய்திகளும் வந்தது கிடையாது என்றும் மேலும் நடிகை மீனாவை பற்றி பலவிதமான கருத்துகளையும் தெரிவித்துள்ளார். நடிகை மீனா அவர்கள் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவதும் தெரியாது, போவதும் தெரியாது அதுமட்டுமல்லாமல் கேரவன் கேட்க மாட்டார் அவ்வளவு அமைதியாக நடித்துக் கொடுத்து நல்ல பெயர் வாங்கி கொடுத்துள்ளார் நடிகை மீனா என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து நடிகை மீனாவின் மகள் சமீபத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார் விரைவில் அவரும் ஒரு கதாநாயகியாக நடிக்கலாம் என்று கூறியுள்ளார்.