நடிகர் ரஜினியை எப்பொழுதும் சிறந்த இயக்குனருடன் கதையை கேட்டு அவரது படத்தில் நடிப்பது வழக்கம் அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் 80 காலகட்டங்களில் இருந்தது இப்போது வரையிலும் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தன்னை மிகப்பெரிய அளவில் வளர்த்துக் கொண்டவர் கே எஸ் ரவிக்குமார்.
இவர் அவரது படங்களில் நடிப்பதையும் தாண்டி மற்ற படங்களிலும் நடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். மேலும் அண்மைக்காலமாக படங்களை தயாரித்தும் வருகிறார். இதனால் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நபராக வலம் வருகிறார் கே எஸ் ரவிகுமார் இவர் ரஜினியை வைத்து பல படங்களை கொடுத்து அசத்தியுள்ளார்.
மீண்டும் ஒரு முறை ரஜினியிடம் ஒரு புதிய கதையை சொல்லி கமிட்டானார் கே எஸ் ரவிக்குமார் அந்த படத்திற்கு ஜக்குபாய் என பெயர் வைக்கப்பட்டது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட அதிரடியாக வெளியானது இதில் அப்கானிஸ்தான் தீவிரவாதி போல ரஜினி இருப்பார்.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியதை தொடர்ந்து இந்த படத்தின் முதல் பாதி கதையை எழுதப்பட்டது இரண்டாவது பாதி கதையை எழுதும்போது பாட்ஷா படத்தின் கதை போலவே வருவதால் வேறு வழியில்லாமல் படம் டிராப் ஆனது உண்மையில் சொல்லவேண்டுமென்றால் இந்த படத்தை தடுத்து நிறுத்தியது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அதன் பிறகு இந்த படம் படமாக்க பட வில்லை என்றாலும் சிறு இடைவெளிக்கு பிறகு ஜக்குபாய் படத்தின் கதையை நடிகர் சரத்குமாருக்கு சொல்லி கமிட் செய்தார். இந்த படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்து இருந்தார் இந்த படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட்டது.
இந்த படம் அப்போது வெளிவந்த தோல்வியை சந்தித்தது. அதன்பின் நடிகர் சரத்குமாரின் சினிமா பயணம் சற்று கீழே இறங்கியது ரஜினி கதையை கேட்டுவிட்டு நடிக்காமல் போயிருந்தார். அந்த கதையை சரத்குமார் தேர்ந்தெடுத்து நடித்தார். இதன் மூலம் தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டார்.