சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ரஜினியிடம் பேசிய சரத்குமார்.. தலைவர் என்ன சொன்னார் தெரியுமா.?

rajinikanth
rajinikanth

Actor Rajinikanth: வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று நடிகர் சரத்குமார் கூறிய நிலையில் சமீப காலங்களாக இது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக இருந்து வந்தது. எனவே தற்போது இதற்கு சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ஏராளமான சர்ச்சைகள் வெளியாகி வருவதுர்நாளுக்கு நாள் ரஜினி விஜய் ரசிகர்களுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டார் சர்ச்சை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நடிகர் சரத்குமார் தான். அதாவது, வாரிசு படத்தில் விஜய்யின் அப்பாவாக நடிகர் சரத்குமார் நடித்திருந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் பேசும்பொழுது சூரியவம்சம் படத்தில் 175வது நாள் விழாவில் விஜய் தான் எதிர்காலத்தில் சூப்பர் ஸ்டார் இன்று நினைத்தேன் அது தற்பொழுது நடந்துள்ளது.

விஜய் தான் இப்பொழுது சூப்பர் ஸ்டார் என பேசியிருந்தார் எனவே இதனால் ரஜினியின் ரசிகர்கள் கொந்தளித்தனர் இவ்வாறு அதன் பிறகு விஜய் ரஜினி ரசிகர்கள் மாறி மாறி மோதிக் கொண்டு வந்தார்கள். சமீபத்தில் ஜெயிலர் இசை வெளியிட்டு விழாவில் ரஜினி பேசியதும் இணையதளத்தில் பேசும் பொருளாக மாறியது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சூப்பர் ஸ்டார் சர்ச்சைக் நடிகர் சரத்குமார் பேட்டி அளித்துள்ளார். அதில், ‘நான் சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பான விளக்கத்தை ரஜினியிடம் கொடுத்து விட்டேன் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற விளங்குவதை வைத்து சூப்பர் ஸ்டார் என விஜய்யை கூறினேன் இது குறித்து எல்லாம் கவலைப்பட வேண்டாம் என ரஜினி எனக்கு ஆறுதல் தெரிவித்தார்’ என சரத்குமார் கூறியுள்ளார்.

தற்பொழுது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வருகின்ற 10ம் தேதி அன்று வெளியாக இருக்கும் இந்த படத்தின் ப்ரீ புக்கிங் வேலைகள் நடைபெற்று வருகிறது. நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சுனில், விநாயகன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.