ஷங்கரையே பல மணி நேரம் காக்க வைத்து அவமானப்படுத்தி திருப்பி அனுப்பிய சரத்குமார்.! அப்பதான் அந்த வலியும் வேதனையும் தெரியும்…

shankar-sarathkumar
shankar-sarathkumar

தமிழ் சினிமாவில்  பிரம்மாண்ட இயக்குனர் என்று அன்போடு அழைக்கப்படுபவர் இயக்குனர் சங்கர் இவர் பவித்திரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்  அதேபோல் பவித்ரன் தன்னுடைய படங்களில் பணியாற்றும் பொழுது முழு சுதந்திரத்தையும் கொடுத்துள்ளார். அதனால் கிட்டத்தட்ட ஒரு முழு இயக்குனர் போலவே பணியாற்றி வந்தார் சங்கர்.

இயக்குனர் சங்கரும் பவித்திரனும் இந்து திரைப்படத்தின் இசைக்காக இளையராஜா ஸ்டுடியோ சென்றுள்ளார்கள் அப்பொழுது இளையராஜா ஒவ்வொரு ட்யூனாக போட்டு காட்டியுள்ளார் அதற்கு சங்கர் இது சரி இல்லை அது சரி இல்லை என கூறியுள்ளார். ஆனால் அந்த திரைப்படத்தின் இயக்குனர் பவித்ரன் அமைதியாக இருந்து உள்ளார்  ஒரு காலகட்டத்தில் டென்ஷன் ஆன இளையராஜா படத்திற்கு இயக்குனர்  நீயா இல்லை அவரா என்பதை முடிவு செய்துவிட்டு பிறகு வாருங்கள் என கூறி அனுப்பி விட்டாராம். அதுமட்டுமில்லாமல் நான் இனி உங்கள் திரைப்படத்திற்கு டியூன் போட மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

அதன் பிறகு இந்து திரைப்படத்திற்கு தேவா இசை அமைத்திருந்தார் உதவி இயக்குனராக சங்கர் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது கேடி குஞ்சு மேனன் தயாரிப்பில் இயக்குனராக மாறுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து  பவித்ரன் திரைப்படத்திலிருந்து விலகி  ஜென்டில்மேன் திரைப்படத்தை இயக்க ஆரம்பித்தார் இந்த திரைப்படத்தை கேடி குஞ்சு மேனன் தயாரித்தார். ஆனால் இயக்குனர் சங்கர் இந்த  திரைப்படத்தில் நடிப்பதற்காக முதன் முதலில் நடிகர் சரத்குமாரை தேர்வு செய்து கேடி குஞ்சுமேனன் அவர்களிடம் கூறியுள்ளார்.

உடனே ஷங்கரை சரத்குமார் இடம் கதை சொல்வதற்காக அனுப்பியுள்ளார். கதை சொல்ல சென்ற ஷங்கர் காலையில் இருந்து மதியம் வரை சரத்குமார்க்கா காத்துக் கொண்டிருந்தார் ஆனால்  சரத்குமார் கதை கேட்க வரவில்லை  அதற்கு காரணம் தொடர்ந்து பவித்ரன் இயக்கத்தில்  இந்து சூரியன், வசந்தகால பறவைகள், ஐ லவ் இந்தியா, போன்ற பல திரைப்படங்களில் நடித்து வந்தார் இந்த சூழ்நிலையில் பவித்திரனை விட்டு விலகிச் சென்ற சங்கர் இயக்கத்தில் தான் நடித்தால் பவித்திரனுக்கு தன் மீது மன வருத்தம் வந்துவிடும் என்பதற்காக தான் சங்கரை வரவழைத்து காக்க வைத்து புறக்கணித்துள்ளார்.

பல மணி நேரம் காத்துக் கொண்டிருந்த சங்கர் அவமானத்துடன் சென்றுள்ளார் நடந்ததை தயாரிப்பாளர் குஞ்சு மேனன் அவர்களிடம் தெரிவித்துள்ளார் ஆனால் தயாரிப்பாளர் குஞ்சி மேனன் பரவாயில்லை வேறு ஒரு நடிகரை தேர்வு செய்து கொள்ளலாம் என நடிகர் அர்ஜுனை தேர்வு செய்து ஜென்டில் மேன் திரைப்படத்தில் நடிக்க வைத்தார்கள் படமும் மிகப்பெரிய வெற்றியடைந்தது..