கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இத்தடை தற்பொழுது வரை அமலில் இருந்து வருகிறது இத்தடை மே 17 வரை நீடிக்கும் என அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து சினிமா பிரபலங்கள் அனைவரும் தற்போது வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
வீட்டில் போரடிக்காமல் இருக்க சினிமா பிரபலங்கள் ஆன்லைன் மூலம் மற்ற பிரபலங்களுடன் உரையாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்கள் அண்மையில் தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
ஆன்லைனில் மூலம் பேட்டியளித்து வந்தார் அப்பொழுது சரத்குமார் அவர்கள் தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி பற்றிய கேள்வி கேட்ட பொழுது அதற்கு பதிலளித்த சரத்குமார் நான் ஒரு காலகட்டத்தில் பண பிரச்சினையில் இருந்து வந்தேன். அப்பொழுது தயாரிப்பாளர் ஒருவர் சிரஞ்சீவியிடம் தேதி வாங்கிக் கொடுங்கள் அவரை வைத்து படம் எடுத்து அதிலிருந்து வரும் லாபத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன் என்றார்.
உடனடியாக சிரஞ்சீவியை சந்திக்க கிளம்பினேன் ஹைதராபாத் சூட்டிங்கில் இருந்த சிரஞ்சீவி இடம் தனிமையில் பேசவேண்டும் என்று கூறினேன் உடனடியாக வீட்டிற்கு அழைத்துச் சென்று சாப்பிட வைத்தார் பின்னர் என்ன பிரச்சனை என்று கேட்டார்.
அப்பொழுது நான் இதுபோல் பல பிரச்சனைகளில் இருக்கிறேன் என கூறினேன் அதற்கு தற்போது கைவசம் இருக்கும் படங்களை நடித்த பிறகு உங்களுக்கு தேதி தருவதாக உறுதியளித்தார். சம்பளம் பற்றிக் கேட்டதற்கு உனக்கு பிரச்சனை என்று சொன்னிர்களே எனக்கு எதுவும் வேண்டாம் பிரச்சனை முதலில் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார் இதனை கண் கலங்கியவாறு ஊடகம் முன்பு தெரிவித்தார்.