எந்த ஒரு முன்னணி நடிகரும் செய்ய தயங்கும் செயலை விஜயகாந்திற்காக செய்து காட்டிய சரத்குமார்.! இவர்தான் ரியல் ஹீரோ…

sarathkumar
sarathkumar

80 மற்றும் 90 களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகர் சரத்குமார் இவர் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் அதேபோல பல திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். சரத்குமார் பொதுவாக கதாநாயகனாக நடிப்பதை விட வில்லன் கேரக்டர் கச்சிதமாக பொருந்தும்.

அந்த வகையில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான புலன் விசாரணை படத்தில் சரத்குமாரை நடிக்க வைக்க விஜயகாந்தின் நண்பரான ராவுத்தர் சரத்குமாரை நேரில் சென்று சந்தித்து இருக்கிறார். அதன் பிறகு அவருடைய உடல் தோற்றத்தை பார்த்த ராவுத்தர் உங்களுடைய இந்த தோற்றம் விஜயகாந்த் அவர்களுக்கு மிகவும் பிடித்து விடும் என்று கூறி இருக்கிறார்.

அதன் பிறகு புலன் விசாரணை திரைப்படத்தில் நடிக்க ஆர் கே செல்வமணியை சந்திக்க சொல்லி இருக்கிறார் அதன் பிறகு அவரை சந்தித்தபோது சரத்குமாரை பார்த்து அதனை ஆர் கே செல்வமணியும் ராவுத்தரும் தங்களுக்குள் ஏதோ ஒன்று பேசிக்கொண்டு இருப்பதை கவனித்தார் சரத்குமார். அப்படி அவர்கள் என்ன பேசினார்கள் என்றால் சரத்குமார் உடைய தோற்றத்திற்கு மீசை எடுத்தால் வில்லன் கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தும் என அவர்களுக்குள்ளே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதை அவரிடம் எப்படி சொல்வது என்று தயங்கிய ஆர் கே செல்வமணி ராவுத்தரும் இவர்களுக்குள்ளே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதன் பிறகு சரத்குமார் அவர்கள் உணவு உண்டு கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு தன்னுடைய அறைக்குள் சென்று மீசை, தாடி என அனைத்தையும் வைழித்துக்கொண்டு உணவை முடித்து வெளியே வந்தார்.

இதைப் பார்த்த ராவுத்தரும் ஆர்.கே செல்வமணி அதிர்ச்சியாகியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இவருடைய தோற்றத்தையும் இவர் அர்ப்பணித்த செயலாளர் நீங்கள் தான் இந்த படத்தில் வில்லன் என உடனே ஒப்பந்தம் செய்து விட்டார்கள். இந்த சுவாரஸ்யமான தகவலை அண்மையில் நடந்த ஒரு பேட்டியில் சரத்குமார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி விஜயகாந்தின் மீது உள்ள மரியாதையாளும் அந்த படத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் தன்னுடைய மீசையை பெருந்தன்மையாக எடுத்ததால் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.