90 காலகட்டங்களில் புகழ் பெற்ற நடிகராக பார்க்கப்பட்டவர் நடிகர் சரத்குமார். இவர் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தயங்காமல் நடிக்க கூடியவராக இருந்தார் இதனால் அப்பொழுது மக்கள் மற்றும் ரசிகர்களுக்கும் பிடித்த ஹீரோவாகவும் இருந்து வந்துள்ளார் சினிமாவுல அதிக ஹிட் படங்களை கொடுத்த வரிசையில் இவரும் இருக்கிறார் இவர் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய ஹிட் அடித்த படம் சூரிய வம்சம் 1997 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் நடித்தார்.
இந்தப் படத்தில் சரத்குமார் உடன் இணைந்து பிரியா ராமன், தேவயானி, மணிவண்ணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இந்த படத்திற்கு பிறகு சரத்குமாருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்க சமீபத்திய பேட்டி ஒன்றில் சூரியவம்சம் படத்தின் இயக்குனர் விக்ரமன் விஷயங்களை பதிவு செய்துள்ளார். அதில் அவர் சொன்னது ஒரு காட்சியில் சரத்குமார் சாப்பிடுவது போன்ற ஒரு காட்சி இருந்திருக்கிறது அந்த காட்சியை இரவில் எடுப்பதற்காக முடிவு செய்திருந்தோம் ஆதலால் இரவு ஒரு நல்ல ஹோட்டலில் சரத்குமாருக்கு அரிசி சாப்பாடு தயார் செய்து வாங்கி வர வேண்டும் என ப்ரொடக்ஷன் யூனிட்டிடம் கூறி இருந்தார்.
இரவு சாப்பாடு ரெடி ஆகி இருந்தது காட்சி எடுக்க தொடங்கிய பொழுது சரத்குமார் அந்த சாப்பாட்டை சாப்பிட்டு இருக்கிறார். இயக்குனர் கட் சொன்னவுடன் சரத்குமார் ஓடி சென்று சாப்பிட்ட சாப்பாட்டை வாந்தி எடுத்து உள்ளார் இதனை பார்த்த இயக்குனர் சரத்குமாரை பார்த்து உங்களுக்கு அரிசி சோறு பிடிக்காதா என கேட்டு இருக்கிறார் அதற்கு சரத்குமார் இந்த சாப்பாடு மதியமே வாங்கியது போல, கெட்டுப் போய் உள்ளது நான் புரோடக்ஷன் யூனிட்டிடம் கேட்டேன்.
அவர்கள் கடைசி நிமிடத்தில் தயார் செய்ய முடியவில்லை இதனை இயக்குனரிடம் சொல்லிடாதீர்கள் என சொன்னார்கள் சரி என்று சொல்லித்தான் இதனை சாப்பிடுவது போல நடித்து என கூறி இருக்கிறார். அதாவது இது கெட்டுப்போன சாப்பாடு தான் என்று தெரிந்தோமே அந்த காட்சி நன்றாக வரவேண்டும் என்பதற்காக சாப்பிட்ட சாப்பாட்டை தொண்டை வரை அடக்கி வைத்து கட் சொன்னவுடன் போய் துப்பி இருக்கிறார் இதனை கேட்டதும் இயக்குனர் ஷாக் ஆகிவிட்டாராம் ஒரு காட்சி நன்றாக வர வேண்டும் என்பதற்காக இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து இருக்கிறீர்களே என கூறி இயக்குனர் விக்ரமன் நிகழ்ந்து போனாராம்.