80 காலகட்டத்தில் தொடர்ந்து ஏராளமான வெற்றிப் படங்களைத் தந்து தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத நாயகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சரத்குமார். இவர் தமிழில் பல்வேறு வெற்றி படங்களை தந்து சுப்ரீம் ஸ்டார் என்ற பெயருடன் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
இவ்வாறு முன்னணி நடிகராக வலம் வந்த இவர் ஒரு கட்டத்திற்குப் பிறகு அரசியலிலும் பணியாற்றத் தொடங்கினார். அந்த வகையில் அ. இ. ச. ம. க என்ற ஒரு அரசியல் கட்சியின் தலைவர் ஆவார். இவ்வாறு பிரபலமடைந்த இவரின் வாரிசாக நடிகை வரலட்சுமி சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது உள்ள மற்ற நடிகைகளைவிடவும் தமிழ், தெலுங்கு, கன்னட போன்றவற்றில் தொடர்ந்து நடித்து பிசியாக இருந்து வருகிறார்.
இவர் மற்ற நடிகைகளைப் போல் ஹீரோயினாக மட்டும்தான் நடிப்பேன் என்றெல்லாம் கூறாமல் வில்லி கதாபாத்திரம், குணச்சித்திர கதாபாத்திரம் போன்ற கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் அனைத்து கேரக்டர்களிலும் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இதன் மூலம் ஏராளமான ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார்.
இவ்வாறு சினிமாவில் வளர்ந்துள்ள இவரை பற்றி சரத்குமார் சாய் வித் சித்ரா என்ற நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொள்ளும்போது சில தகவல்களை கூறியுள்ளார். அந்நிகழ்ச்சியில் நான் வரலட்சுமிக்கு இன்னும் கொஞ்சம் உதவி இருந்தால் வரலட்சுமியின் சினிமா வாழ்க்கை இன்னும் கொஞ்சம் மேம்பட்டு இருக்கும். வரலட்சுமி மருத்துவ படிப்புதான் முடித்துள்ளார்.
எனவே சரத்குமார் வரலட்சுமியை சினிமா பக்கம் வரவேண்டாம் என்று கூறியிருந்தாராம். ஏனென்றால் வரலட்சுமி சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால் அதற்கான படிப்பை படிக்க வைத்திருப்பேன் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு சினிமாவிற்கு வருவதை எனக்கு விருப்பமில்லை என்று கூறி உள்ளார்.
ஆனால் வரலட்சுமி இவரின் அம்மாவான ராதிகா துணையுடன் போடா போடி திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி அதன் பிறகு தனது விடா முயற்சியினால் தற்போது தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத ஓர் இடத்தைப் பிடித்துள்ளார். எனவே சரத்குமார் வரலட்சுமியை சினிமாவில் நடிக்கக்கூடாது என்று கூறியதை நினைத்து தற்போது கவலைப் படுகிறேன் என்று கூறிவுள்ளார் சரத்குமார்.