பிரபல நடிகையின் அழகில் மயங்கி விழுந்து லிவிங் டு கெதரில் வாழ்ந்த சரத்குமார்.? ஆசை அதிகமானதால் விட்டுச் சென்ற நடிகை..

sarathkumar

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சரத்குமார் தற்பொழுது அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார். சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் வில்லன் வேடங்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர். அதன் பிறகு வில்லனாக நடித்து முன்னுக்கு வர முடியாது என எண்ணி ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.

ஹீரோவாக முதன் முதலில் சூரியன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நன்கு வரவேற்பை பெற்றது அது மட்டும் இல்லாமல் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. நடிகர் சரத்குமார் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே சாயாதேவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த வகையில் வரலட்சுமி பூஜா என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

பின்பு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பொழுது நடிகை நக்மாவுடன் நெருக்கம் அதிகமானது அதனால் தன்னுடைய மனைவி சாயாதேவி அவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு நடிகை ராதிகாவை முறைப்படி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

நக்மாவுடன் சரத்குமார் மிகவும் நெருக்கமாக பழகியதாகவும் இருவரும் உருகி உருகி காதலித்து வந்ததாகவும் சிறிது காலம் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்ததாகவும் அப்பொழுது பத்திரிகைகளில் தகவல் வெளியானது. அந்த சமயத்தில் நடிகர் சரத்குமார் நக்மா அவர்களுக்கு சொகுசு வீடு ஒன்றையும் கட்டிக் கொடுத்தாராம் ஆனால் மனைவி விவாகரத்து பிரச்சனையால் கடைசி வரை இருவரும் ஒன்று சேராமலே போய்விட்டார்.

nagma
nagma