கேவலம் பணத்திற்காக சரத்குமார் இப்படி செய்துவிட்டாரே.! இளம் நடிகர்களை பார்த்தாவது திருந்துங்கள் திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்.!

sarathkumar
sarathkumar

நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர்  அப்பொழுது உள்ள ரசிகர்கள் இவரை சுப்ரீம் ஸ்டார் என்று அழைப்பார்கள் தமிழ் சினிமாவின் ஆரம்ப கால கட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் சரத்குமார் அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பெயரும் புகழும் பெற்றார்.

தொடர்ந்து வில்லனாக நடித்தாள் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது என என்னி படிப்படியாக ஹீரோவாக தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது ஆனால் போகப் போக தவிர்க்க முடியாத நடிகர்களில் இவரும் ஒருவர் என்ற அந்தஸ்தை அடைந்தார் அது மட்டும் இல்லாமல் சரத்குமார் திரைப்படங்கள் ரஜினி கமல் திரைப்படங்களுக்கு இணையாக வாசுல் வேட்டை நடத்தியது.

கமல் ரஜினி ஆகியவர்களின் திரைப்படத்திற்கு இணையாக இவரின் திரைப்படங்கள் வெற்றி பெற்றது மேலும் சரத்குமார் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் ஆனால் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்பொழுது கூட தளபதி விஜய் அவர்கள் நடித்து வரும் தளபதி 67 திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி தான் இயக்கி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்காக மிகப்பெரிய தொகையை சரத்குமார் சம்பளமாக பெற இருக்கிறாராம். சினிமாவில் நடித்து பல கோடி சம்பளம் சம்பாதித்து வைத்திருந்தாலும் தற்பொழுது சரத்குமார் ஒரு சூதாட்ட விளம்பரத்தில் நடுத்திருப்பதை பார்த்த ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பணத்திற்காக இப்படி எல்லாம் கூட செய்வீர்களா கொஞ்சம்கூட ரசிகர்களை நினைத்து பார்க்க மாட்டீர்களா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டத்தால் பணத்தை இழந்து பலரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் அதிகம் நடந்து கொண்டே வருகின்றன அப்படி இருக்கும் நிலையில் அது போல் விளம்பரங்களில் சரத்குமார் நடித்திருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.