ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தவர் நடிகை சரண்யா. இவர் கதாநாயகியாகவும், சோலோ ஹீரோயினாகவும் வலம் வந்தார். இவரின் சிறந்த நடிப்பு திறமையினால் சினிமாவில் தனது முத்திரையைப் பதித்தார்.
பொதுவாக நடிகைகள் என்றால் 30 முதல் 35 வயது வரை மட்டுமே முன்னணி நடிகையாக வலம் வர முடியும் பிறகு தங்களது இளமை குறைந்ததும் இவர்களுக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைக்காது ரசிகர்களும் முன்னணி நடிகை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அந்த வகையில் ஒரு சில நடிகைகள் சினிமாவை விட்டு விலகி விடுவார்கள். ஒரு சிலர் மட்டும் தான் தொடர்ந்து துணை நடிகையாகவும் மற்றும் அம்மா போன்ற கேரக்டரிலும் நடித்து வருவார்கள்.
அந்த வகையில் அம்மா கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கவர்ந்தவர் தான் சரண்யா. இவர் தனுஷ், விஜய் உட்பட இன்னும் ஏராளமான நடிகர்களுக்கு அம்மா கேரக்டரில் நடித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் இவர் அம்மா கேரக்டரில் நடித்து பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்பு வில்லன் மற்றும் துணை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பொன்னியின் செல்வனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்களும் உள்ளார்கள். அவர்களின் பெயர் சாந்தினி மற்றும் பிரியதர்ஷினி.
இந்நிலையில் சாந்தினிக்கு சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தாமல் வீட்டில் நெருங்கிய சொந்தக்காரர்கள் உடன் சிம்பிளாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது.
அவ்வபோது சரண்யா மற்றும் பொன்னியின் செல்வன் இவர்கள் தங்களது மகள்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.