80, 90 கால கட்டங்களில் பிரபலமடைந்த பெரும்பாலன இயக்குனர்கள் இப்போ இருக்கின்ற இடம் தெரியாமல் போய்யுள்ளனர் ஆனால் ஒரு சில இயக்குனர்கள் மட்டும் காலத்திற்கு ஏற்றவாறு ஹிட் படங்களை கொடுத்து இன்றும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் இயக்குனர் சரண் காதல் கோட்டை, அமர்க்களம், ஜெமினி, ஜேஜே, வசூல்ராஜா, அட்டகாசம் போன்ற ஹிட் படங்களை..
கொடுத்து இன்னமும் மக்கள் மத்தியில் இடம் பிடித்திருக்கிறார் இவர் கடைசியாக பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரவ்வை வைத்து 2019 ஆம் ஆண்டு மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்கின்ற திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி ஓடிக்கொண்டிருக்கும் சரண் சமீபத்திய பேட்டி ஒன்றில் இசையமைப்பாளரும், நடிகருமான எம் எஸ் விஸ்வநாதன் அவர்களைப் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
காதல் மன்னன் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்ற போது ஒருநாள் விவேக் சரணிற்கு ஃபோன் செய்து தூர்தர்ஷனில் எம் எஸ் விஸ்வநாதனின் பேட்டி ஓடிக்கொண்டிருக்கிறது பாருங்கள் என்று கூறினாராம் இவரும் அந்த பேட்டியை பார்த்தாராம் தனக்கே உரிய குழந்தைத்தனமான உடல் மொழியில் எம்எஸ் வி அவர்கள் பேசி இருந்தார் பின்னர் விவேகிடம் இவரை நம் படத்தில் நடிக்க வைத்தால் என்ன என்று கேட்க அவரும் நல்ல யோசனையாக இருக்கிறது என்று கூறினாராம்.
கதைப்படி அஜித் ஒரு மேனுஷனில் தங்கி இருப்பதார். அங்கு ஒரு மிஸ் வைத்துக் கொள்ளலாம் அந்த மெஸ்ஸின் முதலாளி எம் எஸ் வி -யை நடிக்க வைக்கலாம் கதாபாத்திரத்திற்கு மெஸ் விஸ்வநாதன் என்று பெயர் வைத்தால் அது எம்எஸ் விஸ்வநாதன் என்று ஒலிக்கும் படியாக இருக்கும் என்று அவரது கதாபாத்திரத்தை உருவாக்கிக்கிட்டு சரணும், விவேக்கும் எம் எஸ் வி வீட்டிற்கு சென்று உள்ளார்கள்.
ஆரம்ப காலகட்டத்தில் எம் எஸ் விஸ்வநாதன் நடிக்க வேண்டும் என்று நினைத்து தான் திரைத்துறைக்கு வந்துள்ளார் ஆனால் வாய்ப்பு கிடைக்காததால் இசையமைப்பாளராக மாறிவிட்டாராம் .. சரணும், விவேக்வும் நடிக்க வாய்ப்பு கேட்ட போது நீங்கள் என்னிடம் இசையமைக்க தானே கேட்டு வந்திருக்க வேண்டும் நடிக்க் கேட்கிறீர்களே என்று நடிக்க மறுத்தாராம்..
இவர்களும் விடாப்படியாக அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வற்புறுத்தி உள்ளனர் ஒரு கட்டத்தில் ஒரு கடிதத்தில் உங்கள் மகன் எங்கள் படத்தில் நடிக்க மறுக்கிறார் நீங்கள் தான் அவரை சம்மதிக்க வைக்க வேண்டும் என்று எழுதி எம் எஸ் பி வீட்டில் இருந்த அவரது அம்மாவின் புகைப்படத்திற்கு கீழ் வைத்துவிட்டு உங்கள் அம்மாவிடம் கூறிவிடும் நடிக்கவில்லை என்றால் உங்கள் அம்மா மன்னிக்க மாட்டார் என்பது போல் மிரட்டி உள்ளவர்கள் அவரும் உண்மையாகவே பயந்து இறுதியாக நடிக்க சம்மதம் தெரிவித்தாராம். பிறகு அந்த படத்தில் நடிக்க 10 லட்சம் சம்பளம் வாங்கினாராம்.