சரக்கு முடிச்சிட்டு தான் லியோவே.? மன்சூர் அலி கான் அதிரடி…

mansoor-ali-khan
mansoor-ali-khan

தமிழ் சினிமாவில் 90களில் பயங்கர வில்லனாக பல திரைப்படங்களில் நடித்து மிரட்டியவர் நடிகர் மன்சூர் அலிகான். மேலும் நடிகர் கேப்டனுக்கு டப் கொடுத்த வில்லன் நடிகர் என்றால் அது மன்சூர் அலிகான் தான் அந்த அளவிற்கு கொடூர வில்லனாக 90களில் காணப்பட்டார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

அது மட்டுமல்லாமல் இவரை படத்தில் வில்லனாக பார்க்கும் போது பல ரசிகர்களுக்கு பயமாதான் இருக்கும் ஆனால் தற்போது நடிகர் மன்சூர் அலிகான் குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரங்கலிலும் நடித்து வருகிறார் இது பெரிதளவில் ரசிகர்கள் மத்தியில் கவறவில்லை.

இதனை தொடர்ந்து  தற்போது மன்சூர் அலிகான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் வில்லனாக காலம் இறங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது. விரைவில் நடிகர் மன்சூர் அலிகான் லியோ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் லியோவிற்கு முன்பே நடிகர் மன்சூர் அலிகான் தற்போது ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலுடன் விஜய் சேதுபதி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது புதுமுக இயக்குனர் ஜெயக்குமார் இயக்கத்தில் மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகி வரும் சரக்கு என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த திரைப்படத்தில் வலினா பிரின்ஸ் கதாநாயகியாக நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸி, தீனா, உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படம் தமிழ்நாட்டை பாடாய் படுத்தும் மதுவை வைத்து ஒரு புரட்சி செய்யும் படமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு தான் நடிகர் மன்சூர் அலிகான் லியோ திரைப்படத்திற்கு செல்வார் என்று கூறப்படுகிறது.