தல அஜித்துடன் செல்பி எடுத்து கொண்ட சந்தோஷ் நாராயணன் அதன் பிறகு என்ன நடந்தது தெரியுமா.! அவரே கூறியுள்ளார்.

ajith-

சினிமாவில் உள்ள ஒரு  நடிகரை  ரசிகர்களுக்கு பிடித்து  விட்டால் அந்த நடிகருக்கு அவரது ரசிகர்கள் புனைப் பெயர் வைப்பது வழக்கம் அந்த வகையில் தல அஜித் அவர்களுக்கு பல புனை பெயர்களை வைத்து கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள் அந்த வகையில் அல்டிமேட் ஸ்டார், தல, காதல் மன்னன் என பல பெயர்களில் அவரை அழைத்து வருகின்றனர் அந்த அளவிற்கு தனது பாச பிணைப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்துள்ளார் தல அஜித்.

தல அஜித் அவர்களுடன் நின்று பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் செல்பி எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு கொண்டாடுவது வழக்கம் அந்த வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களும் அஜித்துடன் இணைந்து செல்ஃபி எடுத்துக்கொண்டார் அப்பொழுது நடந்த பல சுவாரஸ்யமான விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியது. ஒருமுறை நான் அவரை ஏர்போர்ட்டில் சந்தித்தேன் அப்போது என்னை யார் என்று தெரியாமல் என் கையைப் பிடித்துக் கொண்டு ஐந்து நிமிடம் பேசிக்கொண்டிருந்தார். பின்பு என்னிடம் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார் அப்பொழுது நான் மியூசிக் டைரக்டராக இருக்கிறேன் என்று சொன்னேன் அதற்கு அவர் நான் யார் என்று தெரியாமல் இருந்தாலும் நீங்க நல்லா பண்ணுங்க பெரிய ஆளா வரணும் என சொன்னார்.

santhosh narayanan
santhosh narayanan

என் மனைவி வந்து அஜித் அவர்களிடம் என்னை பற்றி சொன்னார் அதன் பிறகு என்னை அவர் தனியாக அழைத்துச் சென்று ரொம்ப சாரிங்க உங்களை தெரியவில்லை என்று சொன்னார். அதேபோல அவரிடம் புகைப்படமும் எடுத்து வந்தவர்களிடம் கூட கனிவாக வெளியே வந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னார் பெரிய ஸ்டார் ஆனவர் இவ்வளவு கனிவாக பேச வேண்டும் என்று அவசியம் இல்லை அவ்வாறு பேசியது எங்களை ஆச்சரியப்படுத்தியது மேலும் அவர் சிறந்த மனிதர் என சந்தோஷ் நாராயணன் அவர்கள் கூறினார்.