காமெடி கலந்த அடல்ட் திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டவர் சந்தோஷ் பி ஜெயகுமார் இவர் இயக்கத்தில் வெளியாகிய ஹரஹர மகாதேவி திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை இயக்கி வெற்றி பெற்றார்.
அதனால் சந்தோஷ் பி ஜெயகுமார் இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகத்தை இயக்க முடிவெடுத்து படத்தை இயக்கி வருகிறார், இருட்டு அறையில் முரட்டு குத்து முதல் பாகத்தில் நாயகனாக கௌதம் கார்த்திக் நடித்து இருந்தார் ஆனால் இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து திரைப்படத்தில் கதாநாயகனாக சந்தோஷ் ஜெயக்குமார் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது அதுமட்டுமில்லாமல் போஸ்டரில் ஆபாசத்தின் உச்சம் இருந்ததால் பல சமூக ஆர்வலர்கள் கடுப்படைந்தார்கள், அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் டீசர் அதிக அளவு ஆபாச வசனங்களும் ஆபாச காட்சிகளும் அதிகமாக இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் டீசரை பார்த்து இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா பார்ப்பதற்கு மிகவும் ஆபாசமாகவும் கண் கூசுகிறது எனவும் தெரிவித்துள்ளார், அதற்கு உடனடியாக பதில் அளித்த இரண்டாம் குத்து படத்தின் இயக்குனர் உங்கள் டிக் டிக் டிக் படத்தில் நடிகைகளை நீச்சலுடையில் பார்க்கும் பொழுது உங்களுக்கு அப்படி தோன்றவில்லையா என தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
இதற்கு பாரதிராஜா பதில் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.