தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய், இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் போய்க்கொண்டிருக்கிறது இந்த நிலையில் இந்த திரைப்படத்தினை வருகின்ற அக்டோபர் மாதம் வெளியிட பட குழு திட்டமிட்டுள்ளது.
ஆரம்ப காலகட்டத்தில் விஜய் காதல் திரைப்படங்களாக நடித்து வந்தார் ஆனால் சமீப காலமாக மாஸ் நடிகராக திகழ்ந்து வருகிறார். இப்படி ஆரம்ப காலகட்டத்தில் காதல் திரைப்படங்களில் நடித்து வந்த விஜய்யை மாறுபட்ட விஜையாக மாற்றி அமைத்தது சச்சின் திரைப்படம் தான். இந்த திரைப்படத்தினை மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியாகியது.
2005 ஆம் ஆண்டு சச்சின் திரைப்படத்துடன் சந்திரமுகி திரைப்படமும் வெளியானதால் சச்சின் திரைப்படம் தோல்வி திரைப்படம் பேசப்பட்டது. சூப்பர் ஸ்டார் , பிரபு, நயன்தாரா, வடிவேலு ஆகியவர்கள் நடித்த திரைப்படம் தான் சந்திரமுகி இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 800 நாட்கள் திரையரங்குகளில் ஓடி மெகா ஹிட் திரைப்படமாக ஹிட் அடித்தது.
ஆனால் விஜய் நடிப்பில் வெளியாகிய சச்சின் திரைப்படம் 200 நாட்கள் மட்டுமே திரையரங்கில் ஓடியது இந்த நிலையில் தயாரிப்பாளர் எஸ் தானு அவர்கள் பல ஆண்டுகள் கழித்து ஒரு உண்மையை கூறியுள்ளார். சச்சின் திரைப்படம் தோல்வி திரைப்படம் கிடையாது ஆனால் சந்திரமுகி திரைப்படம் 800 நாட்கள் ஓடியது. அதேபோல் சச்சின் திரைப்படம் 200 நாட்கள் மட்டுமே ஓடியது இதனால் சச்சின் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி திரைப்படமாக அமைந்தது என தானு அவர்கள் கூறியுள்ளார்.
அதேபோல் அவர் கூறியதாவது படம் லாபம் கிடைத்ததால் பெரிய அமௌன்ட் கொடுக்க சென்றேன் ஆனால் அதனை எஸ்சிஎஸ்சி வாங்க மறுத்ததாக தயாரிப்பாளர் தான கூறியுள்ளார்.
Producer @theVcreations about #Sachein Box Office #LEO #LeoFilm #BloodySweet @actorvijay
— Actor Vijay Team (@ActorVijayTeam) April 22, 2023