சந்திரமுகி 2 ஜோதிகா இல்லையா.? அப்போ யார்ன்னு தெரியுமா.?

jo
jo

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பி வாசு. இவர் இயக்கத்தில் பல வெற்றி படங்களை அவர் என்பது நாம் அறிந்ததே அந்த வகையில் இவர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி திரைப்படம். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஜோதிகா, பிரபு, நயன்தாரா ,வடிவேலு ,நாசர் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர் இப்படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வசூல் சாதனை படைத்தது இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வந்தனர். இந்த நிலையில் இப்படத்தினை தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது இப்படத்தில் வேட்டையன் பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பதிலாக லாவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. சமீபத்தில் அதனை லாவா லாரன்ஸ் உறுதிப்படுத்தினார்.

இதையடுத்து முதல் பாகத்தில் ஜோதிகா சந்திரமுகி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் அவரை நடிக்க வைக்க வேண்டும் என ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் இருப்பினும் இப்படத்தில் அவர் நடிக்கிறாரா என்பது பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்தது இந்த நிலையில் ஜோதிகா அவர்கள் தன்னை சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க அழைக்கவில்லை  மற்றும் யாரும் என்னை அணுக வில்லை எனவும் தெரிவித்தார்.

santhiramugi-tamil360newz
santhiramugi-tamil360newz

இதையடுத்து படக்குழுவினர் ஜோதிகாவுக்கு பதிலாக நடிகை சிம்ரன் நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது இருப்பினும் பட குழுவில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவரவில்லை. இன்னும் ஒரு சிலர் ஜோதிகாவிற்கு பதிலாக  சிம்ரன் நடித்தாலும் சிறப்பாக இருக்குமென வருகின்றனர். இதனால் சிம்ரன் ரசிகர்கள்  மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.  இருப்பினும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.