ஹீரோவோ, காமெடியனோ திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே முன்னேற முடியும் அந்த வகையில் நடிகர் சந்தானம் முதலில் காமெடியனாக திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். முதலில் சின்ன சின்ன படங்களில் தனது திறமையை வெளிக்காட்டி இவர் ஒரு கட்டத்தில் டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடியன்னாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பதிவு செய்தார்.
இவரது காமெடியை பார்க்கவே பலர் திரையரங்கிற்கு வந்தனர். இப்படி காமெடியனாக வெற்றி கண்டவர் மென்மேலும் காமெடியனாக ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகமானார் முதல் படம் வெற்றி படமாக மாற தொடர்ந்து ஹீரோ சப்ஜெக்ட்லேயே நடித்து வந்தார்.
இருப்பினும் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் டாப் ஹீரோயின் படங்களில் காமெடியனாக நடிக்க அழைத்தனர் ஆனால் சந்தானம் முடியவே முடியாது என சொல்லிவிட்டார் இப்படி இருக்கின்ற நிலையில் திடீரென நடிகர் சந்தானம் பழைய ரூட்டை கையில் எடுத்துள்ளார். மீண்டும் காமெடியனாக நடிக்க இருக்கிறார்.
வேறு யார் படத்திலும் இல்லை அஜித் நடிப்பில் உருவாக உள்ள ஏ கே 62 திரைப்படத்தில் தான் காமெடியன் கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்க இருக்கிறாராம். விஷயத்தை அறிந்த ரசிகர்கள் வா தலைவா வா உன்னை பழையபடி பார்க்கத்தான் ஆசை எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.
AK 62 படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து அரவிந்த்சாமி வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திரிஷா இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார் எனவும் சொல்லப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்புகள் விரைவிலேயே வருமென சொல்லப்படுகிறது. மேலும் இந்த தகவல் தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.