சினிமாவுலகில் நடிக்கும் ஒவ்வொரு நடிகரும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க கஷ்டப்பட்டு நடித்து வருகின்றனர் அதில் பெரும்பாலான படங்கள் வெற்றியை ருசித்தாலும் ஒரு சில படங்கள் தோல்வியைத் தழுவுகின்றன அதிலிருந்து மீண்டு தொடர்ந்து வெற்றியை நோக்கி ஓடும் பிரபலங்கள் நம்பர் 1 இடத்தை பிடிக்கின்றனர்.
அப்படி பல ஆண்டுகளாக நம்பர் ஒன் இடத்தை பிடித்து வைத்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது இடத்தை பிடிக்க தற்போது அஜித் – விஜய் போட்டி போடுகின்றனர் அவர்களுக்கு பின்னால் சிம்புவும், தனுஷும் மோதிக் கொண்டு ஓடுகின்றனர்.சினிமா ஆரம்பத்தில் அதிக ஹிட் படங்களை கொடுத்தவர் என்னவோ சிம்பு தான்.
ஆனால் ஒரு கட்டத்தில் தோல்வி படங்களால் தனது எண்ணங்களை மாற்றிக் கொண்டு சினிமாவுலகில் சிறிது காலம் நடிக்காமல் போனார் அதற்குள் நடிகர் தனுஷ் தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தனது மார்க்கெட்டை உயர்த்தி முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்துக்கொண்டார் இதை ஒரு கட்டத்தில் உணர்ந்துகொண்ட சிம்பு மீண்டும் புதிய அவதாரம் எடுத்த தற்போது ஹிட் படங்களை கொடுக்க ஆரம்பித்து வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் சிம்புவும், சந்தானமும் இணைந்து பல்வேறு படங்களில் நடித்து வலம் வந்தனர் அப்பொழுது சந்தானம் மிகப்பெரிய ஒரு காமெடியனாக இருந்ததால் பல்வேறு டாப் நடிகர்கள் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அப்படி சந்தானம் மயக்கம் என்ன, 3 ஆகிய படங்களில் தனுசுடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருந்தார்.
இத்தனை அறிந்த சிம்புவோ சந்தானத்தை உன்னுடைய காமெடி எல்லாம் சூப்பராக இருக்கு நீ ஹீரோவாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என சொல்ல.. ஒரு கட்டத்தில் நடிகர் சந்தானமும் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். இதனால் தனுஷ் படங்களில் நடிக்க முடியாமல் போனது.
சந்தானம் ஹீரோவாக நடித்தாலும் எந்த படமும் சொல்லிக்கொள்ளும்படி மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை. சந்தானம் தனுஷ் படத்தில் நடிக்க மறுத்த சிம்பு சந்தானத்தை ஹீரோவாக மாறினார் ஆனால் சந்தானம் காமெடியனாக இருந்திருந்தால் தற்போது பல படங்களில் நடித்துக் கொண்டிருப்பார் இப்போது ஹீரோவாக நடித்து பெரிய அளவில் வெற்றியை கொடுக்காமல் தவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.