விஜய் ஆண்டனியின் மகள் மரணச் செய்தி தெரிந்தவுடன் முதல் ஆளாய் சென்ற சந்தானம்..

santhanam
santhanam

Vijay Antony- Santhanam: இன்று அதிகாலை 3 மணி அளவில் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. 12ஆம் வகுப்பு படிக்கும் மீரா தனது 16 வயதில் அறையில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது திரை உலகினார்கள், ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வயதில் அப்படி என்ன மன கஷ்டம் இருந்திருக்கும் என்பது கேள்விக்குறியாக எழுந்துள்ளது. நேற்று முதல் மிகவும் சோகமாக இருந்து வந்த மீரா இன்று அதிகாலை தற்கொலை செய்துக் கொண்டார். பொதுவாக விஜய் ஆண்டனி பள்ளி குழந்தைகளை சுதந்திரமாக விட வேண்டும் எந்த மன கஷ்டமும் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார்.

ஆனாலும் இவருடைய மகளே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டது ஆச்சிரியப்படக்கூடிய ஒன்றாகவும் உள்ளது. இவ்வாறு மீரா இறந்ததைத் தொடர்ந்து திரைப் பிரபலங்கள் விஜய் ஆண்டனியை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவரது உடல் இன்று மதியத்துக்கு மேல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு மாலை இறுதி சடங்கு நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

santhanam
santhanam

விஜய் ஆண்டனி இந்த வருடம் தொடர்ந்த ஜனவரி மாதம் பிச்சைக்காரன் 2 படத்தின் ஷூட்டிங் என்பது விபத்தில் சிக்கிக்கொண்டார் இதனால் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்து தற்போது தான் குணமானார். இதனை அடுத்து சமீபத்தில் ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடியானதற்கு விஜய் ஆண்டனி தான் காரணம் என தகவல் வைரலானதை தொடர்ந்து மான நஷ்ட வழக்கு பதிவு செய்ய இருப்பதாகவும் மிகுந்த மன உளைச்சலில் தான் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு தொடர்ந்து பல கஷ்டங்களையும் தாண்டி வந்த விஜய் ஆண்டனி தற்பொழுது மீள முடியாத சோகத்தில் உள்ளார். இந்நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவத்தை கேள்விப்பட்ட நடிகர் சந்தானம் உடனடியாக விஜய் ஆண்டனி வீட்டிற்கு விரைந்து வரும் காட்சிகள் வெளியாகி உள்ளது.