Actor Santhanam: சினிமாவிற்கு காமெடி நடிகராக அறிமுகமாகி தற்பொழுது ஹீரோவாக கலக்கி வரும் சந்தானத்தின் புதிய பட டிரைலர் வெளியாகி உள்ளது. தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் சந்தானம்.
இவர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஹீரோவாக நடிக்க தொடங்கியதனால் சில திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றாலும் பல படங்கள் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியான டிடி ரிட்டன்ஸ் படத்திற்கு நல்ல வரவேற்புகிடைத்தது.
தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சந்தானத்திற்கு இந்த படம் கம்பேக் கொடுக்கும் வகையில் அமைந்தது. இதனை அடுத்து அவர் நடித்திருக்கும் கிக் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. கிக் படம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து தன்யா ஹோப், தம்பி ராமையா, கோவை சரளா, மன்சூர் அலிகான், பரமானந்தம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.
கிக் படத்தினை பிரசாந்த் ராஜ் இயக்க இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எப்பொழுதும் போல மரண கலாயுடன் ரொமான்ஸ் கலந்த காட்சிகளில் சந்தானம் நடித்திருக்கும் நிலையில் கோவை சரளா, தம்பி ராமையா இவர்களுடைய மாஸாக உள்ளது.