சந்தானம் நடித்துள்ள “குலு குலு” திரைப்படம் – முதல் நாளில் அள்ளிய தொகை எவ்வளவு தெரியுமா.?

santhanam
santhanam

நடிகர் சந்தானம் விஜய் டிவியில் வெளியான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் காமெடியனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் ஒரு கட்டத்தில் இவருக்கு வெள்ளி திரையிலும் வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி தொடர்ந்து காமெடியனாக அசத்தினார்.

சந்தானம் காமெடியானாக அஜித், விஜய், சூர்யா, ரஜினி போன்ற டாப் நடிகர்களுடன் நடித்து தன்னை சினிமா உலகில் தக்க வைத்துக் கொண்டார். இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர் திடீரென சினிமா உலகில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். அந்த வகையில் ஹீரோவாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததால் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இதுவரை தில்லுக்குதுட்டு, சக்கபோடு போடு ராஜா, A1, டகால்டி போன்ற திரைப்படங்களில் நடித்தார். அனைத்தும் வெற்றி படங்களாக மாறியது. அதனால் சந்தானத்தின் சினிமா பயணம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இப்பொழுது கூட குலு குலு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அந்த படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது.  குலு குலு படத்தில் சந்தானத்துடன் இணைந்து அதுல்யா, சந்திரா, நமிதா, கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் சிங் ரவாத், சாய் தீனா மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். ரத்தினகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளார் படம் நல்ல வரவேற்பு பெற்று தற்பொழுது மக்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் சந்தானத்தின் குலு குலு திரைப்படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பார்க்கையில் முதல் நாளில் மட்டுமே சுமார் ஒரு கோடி வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது அடுத்தடுத்த நாட்களிலும் நல்ல வரவேற்பு பெற்று நிச்சயம் பிரமாண்டமான ஒரு வசூலை இந்த திரைப்படம் அல்லும் என சொல்லப்படுகிறது.