ஹீரோ போல செம்ம மாஸாக இருக்கும் சந்தானம் மகன்.! எப்படி இருக்கிறார் பாருங்கள்.!

santhanam

திறமை உள்ளவன் பிழைத்து கொள்வான் என்பது போல சின்னத்திரையில் எங்கே ஒரு மூலையில் காமெடி பண்ணிக் கொண்டிருந்த சந்தானம்(santhanam) தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக நடிக்கிறார் என்றால் அதற்கு திறமையை மட்டுமே காரணம். பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் சொல்லு சபா என்ற காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டடு பிரபலமடைந்தார்.

இவர் 2004 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த மன்மதன் என்ற திரைப்படத்தில் காமெடியனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்பினை பெற்றார் சந்தானம். அத்தகைய படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வடிவேலுக்கு அடுத்தபடியாக ஈடு இணையில்லா காமெடி நடிகர் என்ற பட்டத்தை பெற்றார் சந்தானம் மேலும் அவர் காமெடியனாக சிறப்பாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹீரோவாக தனது பயணத்தை மேற்கொண்டார்.

இவர் நடித்த படங்களான தில்லுக்கு துட்டு, ஏ1, டகால்டி, சக்கபோடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 2 போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.தற்போது தொடர்ந்து  பல படங்களில் நடிக்க உள்ளார் சந்தானம் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தானம் தனது மகனை  சில நாட்களுக்கு முன்பு பொது நிகழ்ச்சி ஒன்றில் அழைத்து வந்தார்.

சந்தனத்தை போலவே அவரது மகன் செம்ம ஸ்டைலாகவும், துருதுருவென்று இருந்தார் மேலும் அந்த நிகழ்ச்சியின்போது பல புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். அத்தகைய புகைப்படம் சமுகவலைதளத்தில் வைரலாகி வருகிறது .அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சந்தனத்தையே ஓரம் கட்டும் அளவிற்கு  ஹாண்ட்சம் ,ஸ்டைலாகவும் இருக்கிறார் என புகைப்படத்தை பார்த்து கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

santhanam-son
santhanam-son
santhanam son