யோகிபாபுவை ஒப்பிடும் போது சந்தானம் எவ்வளவோ நல்ல மனிதர்..! நெருப்பே இல்லாமல் யோகிபாபுவை வறுத்தெடுத்த தயாரிப்பாளர்..!

santhanam-1
santhanam-1

சுமார்  1980 ஆண்டிலிருந்தே பல திரைப்படங்களை தயாரித்து மிகப்பெரிய தயாரிப்பாளராக வலம் வருபவர் தான் கே ராஜன் இவர் ஒரு தயாரிப்பாளர் மட்டுமின்றி இயக்குனராகவும் எழுத்தாளராகவும் என் நடிகராக கூட தன்னுடைய திறமையை வெளிக்காட்டி உள்ளார். அந்த வகையில் இவர் பரமபத ஆட்டம் என்ற திரைப்பட விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது மேடையில் பேசிய ராஜான் அவர்கள் சந்தானத்தை பற்றிய பெருமையையும் யோகி பாபு பற்றி பல விஷயங்களையும் மேடையில் பகிர்ந்து கொண்டார்.  அந்த வகையில் நடிகர் சந்தானம் தான் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது தன்னுடைய திரைப்படத் தயாரிப்பாளருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அப்பொழுது சந்தானம் அவருக்கு  உதவி செய்யும் வகையில் தனக்கு நடிப்பதற்கு பணமே வேண்டாம் என பெருந்தன்மையுடன் அந்த திரைப்படத்தில் நடித்து கொடுத்தார் இவ்வாறு நடந்து கொண்ட சந்தானத்திற்கு என்னுடைய பாராட்டையும் வாழ்த்தையும்  நன்றியும் தெரிவிக்கிறேன் என கூரியிருந்தார்.

இதனை தொடர்ந்து நடிகர் யோகிபாபு வை பற்றி சில விஷயங்களை மனம் திறந்த ராஜன் அவர்கள் யோகி பாபு வளர்ச்சி அடைவதற்கு முன்பாகவே எடுக்கப்பட்ட படம் 13 வருடங்களாக வெளிவராமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் யோகி பாபு வாய்ஸ் டப்பிங் மட்டும் பென்ட்டிங்கில் இருந்தது.

அந்த வகையில்  இவர் மற்ற தயாரிப்பாளர்கள் தனக்கு 10 லட்சம் வரை சம்பளம் கொடுக்கிறார்கள் என்ற காரணத்தினால் வெறும் பத்தாயிரத்துக்கு நடித்த இந்த திரைப்படத்தை கிடப்பில் போட்டுவிட்டு இன்றுவரை டப்பிங் பேச வராமல் நேரத்தை கழித்து வருகிறார்.

rajan-1
rajan-1

அதுமட்டுமில்லாமல் தன்னை உயர ஏற்றிவிட்ட ஏணியை தன் காலால் உதைத்து கீழே தள்ளுவது மிகப்பெரிய குற்றம் என மேடையில் யோகி பாபுவை வறுத்தெடுத்ததுமட்டுமல்லாமல் சந்தானத்துடன் ஒப்பிட்டு அவரைப்போல் பெருந்தன்மையுடன் இருங்கள் என அவருக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.