பொதுவாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள் அந்த வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் புது புது ரியாலிட்டி ஷோக்களை உருவாக்கி வருகிறார்கள். அந்தவகையில் தொலைக்காட்சிகளில் சீரியலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அந்த அளவிற்கு ரியாலிட்டி ஷோ விற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒரே சேனல் விஜய் டிவிதான்.
அந்தவகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கோபிநாத் கோமாளி என்ற நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வந்தது அந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போனதன் காரணமாக அதில் இரண்டாவது சீசன் நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இந்த நிகழ்ச்சியை ரசிகர்களுக்கு மிகவும் பொழுதுபோக்காக அமைந்தது மட்டுமல்லாமல் இதில் பல்வேறு கோமாளிகள் கலந்து கொண்டார்கள்.
அதில் புகழ், பாலா, சிவாங்கி, தங்கத்துரை என சொல்லிக்கொண்டே போகலாம் அந்தவகையில் ரசிகர்களுக்கு மிகப் பிடித்த கோமாளியாக இருந்து வந்தவர்தான் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மணிமேகலை இவர் முதன்முதலாக சன்டிவி மூலம் தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார்.
அந்த வகையில் இவருடைய எதார்த்தமான பேச்சு அழகான முகம் ரசிகர்களை சிரிக்க வைக்கும் பாவனை என பல்வேறு திறன் கொண்ட மணிமேகலை விஜய் டிவியில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் அந்த வகையில் இவருக்கு மாபெரும் ரசிகர் கூட்டமே உருவாகிவிட்டது.
இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி இயக்குனர் உசைனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேலும் மணிமேகலை அடிக்கடி தன்னுடைய சொந்த ஊருக்கு செல்வது வழக்கம் அந்த வகையில் அங்கு சென்று தன்னுடைய நண்பர்களுடன் நடனமாடிய வீடியோ வெளியிடுவது நகைச்சுவை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்..
அந்த வகையில் சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா திரைப்படத்தின் மெகா ஹிட் பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடி உள்ளார் இவ்வாறு அவர் நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் அதை ரசிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.