கொஞ்சம் இழுத்தா வேஷ்டி அவுந்துரும்.! சந்தானத்தின் டிக்கிலோனா வசனத்தை வெளுத்து வாங்கிய சின்மயி.!

santhanam-dikkilona

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து வந்த பிறகு நடிகராக நடித்து வரும் நடிகர் என்றால் அது சந்தானம் தான். இவர் காமெடியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ஆனால் சமீபகாலமாக ஒன்லி ஹீரோவாக மட்டும் தான் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் டிக்கிலோனா இந்த திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சையை சந்தித்து வருகிறது.

டிக்கிலோனா திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் யோகி தான் இயக்கியுள்ளார் தற்போது வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தில் சந்தானம், அனகா, யோகிபாபு ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்தில் சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளது.

டிக்கிலோனா திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவு நல்ல விமர்சனங்களைப் பெற்றது பொதுவாக சந்தானத்தின் திரைப்படம் என்றாலே மற்றவர்களுக்கு பட்டப்பெயர் வைப்பது கலாய்ப்பது இது தான் இருக்கும் ஆனால் இந்த திரைப்படத்தில் வசனங்களும் சர்ச்சையை சந்தித்து வருகிறது ஏற்கனவே நடிகர் சந்தானம் மாற்றுத்திறனாளிகளை கேலி செய்யும் விதமாக வசனத்தைப் பேசியுள்ளார் என குற்றச்சாட்டு எழுந்தது.

tweet
tweet

இந்த நிலையில் பெண்கள் ஆடை சுதந்திரம் பற்றி சந்தானம் பேசியுள்ளது இன்னும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் நாயகியை பார்த்து சந்தானம் கோவிலுக்கு கூப்பிடுவார் அப்பொழுது நாயகி அரைகுறை ஆடையில் வந்து நிற்பார் அப்பொழுது சந்தானம் என்ன டிரஸ் இது என கேட்பார் அதற்கு இது ஆடை சுதந்திரம் இதில் நீ தலையிடாதே என நாயகி கூறிவிடுவார்.

அதற்கு சந்தானம் உனக்கு ஏத்த மாதிரி வாழ்வது சுதந்திரம் இல்ல நீ வாழ்றது மத்தவங்க ஏத்துக்கிறதுதான் சுதந்திரம் கொஞ்சம் இழுத்தா அவுந்துறும் இதுக்கு பேர் சுதந்திரமா என வசனத்தை பேசுவார் ஆனால் இந்த வசனம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது பெண்கள் ஆடை குறித்து வெற்றி மாறனிடம் கேட்கப்பட்ட பொழுது அவர் சொன்ன பதிலின் வீடியோவை நெட்டிசன்கள் பதிவிட்டு டிக்கிலோனா திரைப்படத்தில் இப்படி ஒரு வசனத்தை வைத்த இயக்குனரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

santhanam issue

இந்த நிலையில் வெற்றிமாறன் பேசிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு கொஞ்சம் இழுத்தா வேஷ்டி அவுந்துடும்  இப்படி சொன்னா என்ன நடக்கும் சுதந்திரம் என்பது தனக்கே உரித்தான ஒன்று ஆனால் நாம் வளரவளர அதற்கான அர்த்தம் மாறிவிடுகிறது மற்றவர்கள் ஏற்றுக் கொள்வது போல் வாழ்வது மிகவும் கடினம். அப்படித்தான் இந்த திரைப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தானம் கூட மற்றவர்கள் ஏற்றுக் கொள்வது போல் ஒரு வேலை கிடைக்கவில்லையே அதனால் படத்தில் இந்த வசனத்தை நிச்சயம் அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார் என நினைக்கிறேன் அப்படிதான் ரசிகர்களும் இருப்பார்கள்.

அதுமட்டுமில்லாமல் எனக்கு மிகப்பெரிய கேள்வியாக இருப்பது ஒருவரின் ஆடையை எதற்காக பிடித்து இழுக்க வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளார்.

santhanam