santhanam dikkilona poster : நடிகர் சந்தானம் முதன் முதலில் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியில் பிரபலம் அடைந்தார் அதனைத் தொடர்ந்து சினிமாவில் படிப்படியாக கால்தடம் பதித்து தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார், இவர் ஹீரோவாக பல ஹிட் திரைப்படங்களையும் சில தோல்விப் படங்களையும் கொடுத்துள்ளார்.
ஹீரோவாக நடித்த தில்லுக்குதுட்டு இரண்டாம் பாகம் மற்றும் ஏ1 திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று நல்ல வசூலையும் பெற்றுக் கொடுத்தது, இந்த நிலையில் தற்போது கார்த்திக் யோகி இயக்கத்தில் டிக்கிலோனா திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசை அமைக்கிறார்.
இந்த திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஹர்பஜன்சிங், அனேகா, ஷெரின் காஞ்சவாளா, யோகிபாபு, ஆனந்தராஜ், ராம்தாஸ், ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. அதிலும் செகண்ட் லுக் போஸ்டரில் சந்தானம் நிர்வாணமாக நிற்பது போல் போஸ் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் தற்பொழுது படத்தை தயாரிக்கும் கே ஜே ஆர் ஸ்டுடியோ தற்பொழுது டிக்கிலோனா மூன்றாவது போஸ்டரை வெளியிட்டுள்ளது, இந்த போஸ்டரில் சந்தானத்துடன் யோகி பாபு இருக்கிறார்.
இதோ வைரலாகும் டிக்கிலோனா மூன்றாவது போஸ்டர்.