வெள்ளை ஜட்டி போட்டா அழுக்காகிடும் அதான் பேய் கருப்பு ஜட்டி போட்டுருக்கு சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் ட்ரெய்லர்.!

DD returns : சின்னத்திரையில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலம் ஜொலித்துக் கொண்டிருந்தவர் சந்தானம், அதன் பிறகு தமிழ் சினிமாவில் காமெடியனாக களமிறங்கினார் தன்னுடைய காமெடியால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சிரிக்க வைத்தார் அது மட்டும் இல்லாமல் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து காமெடியில் கலக்கி கொண்டு இருந்தார்.

ஒரு காலகட்டத்தில் இனி காமெடியனாக நடிக்கப் போவதில்லை என அதிரடியாக அறிவித்து ஹீரோவாக களமிறங்கினார். இவர் என்னதான் ஹீரோவாக களமிறங்கினாலும் அந்த திரைப்படத்தில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியாகி ஒரு சில திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

சந்தானம் நடிப்பில் தில்லுக்குதுட்டு திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அதனை தொடர்ந்து இரண்டாவது பாகமும் வெளியானது. அப்படி இருக்கும் வகையில் தற்பொழுது மூன்றாவது பாகத்தை டிடி ரிட்டன்ஸ் என்ற தலைப்பில் எடுத்துள்ளார்கள்.

இந்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து சுரபி ரெடி மாறன் பிரதீப் ராவாத் மாசூம் சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ் காந்த், தீனா, தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி, என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு தீபக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் ஆப்ரோ இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே வெளியாகிய தில்லுக்கு துட்டு திரைப்படத்தைப் போலவே இந்த திரைப்படத்திலும் பேயை காமெடியாக காட்டியுள்ளார்கள். காலங்காலமாக இந்த ஜானரில் எத்தனையோ திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் இந்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படமும் பிசிறு தட்டாமல் இருந்து வருகிறது.

வழக்கம்போல் ஒரு தனித்த பேய் பங்களா அதில் ஹீரோ மற்றும் ஒரு சிலர் மாட்டிக் கொள்கிறார்கள் அந்தப் பேய்கள் ஒரு கேம் வைக்கிறார்கள் அதிலிருந்து வெற்றி பெற்று வெளியே வருகிறார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை வழக்கம்போல் இந்த திரைப்படத்தில் பேய் செய்யும் இம்சைகள் அனைத்தையும் மிகவும் காமெடியாக காட்டியுள்ளார்கள்.

இந்த திரைப்படத்தை வருகின்ற ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறது. படக்குழு இந்த நிலையில் தற்பொழுது ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.