வாரிசு பாப்பிங்களா இல்ல, துணிவு பாப்பிங்களா என கேட்ட பத்திரிக்கையாளரை கேமரா முன் அழைத்து கலாட்டா செய்த சந்தானம்..

SANTHANAM
SANTHANAM

வருகின்ற பொங்கல் முன்னிட்டு ரசிகர்கள் பிரபலங்கள் என அனைவரும் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள். ஏனென்றால் பொங்கல் பண்டிகைக்கு ரசிகர்களை மகிழ்ச்சி படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணி நடிகர்களான விஜய், அஜித் இருவரின் திரைப்படங்களும் வெளியாக இருக்கிறது. சில வருடங்களுக்கு பிறகு தற்போது தான் இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது.

எனவே ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள் அந்த வகையில் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் எந்த திரை பிரபலங்களை சந்தித்தாலும் உடனே முதல்ல வாரிசு திரைப்படத்தை பாப்பீங்களா இல்லை துணிவு திரைப்படத்தை பார்ப்பீர்களா என கேட்டு வரும் நிலையில் அதற்கு அனைவரும் பதில் அளித்து வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது இந்த கேள்விக்கு பதில் அளித்த சந்தானம் அங்கே இருக்கும் பத்திரிக்கையாளர்களை கிண்டல் செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த சந்தானம் சமீப காலங்களாக ஹீரோவாக நடித்து வருகிறார்.

எனவே அந்த திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும் ஒரு சில திரைப்படங்கள் தோல்வியினை பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சந்தானத்திடம் தல, தளபதி திரைப்படத்தில் எதனை முதலில் பார்ப்பீர்கள் என்று கேட்டதற்கு சந்தானம் அந்த பத்திரிக்கையாளர்களிடம் நீங்க எந்த படத்தை பார்ப்பீர்கள் என கேட்கிறார்.

பிறகு அந்த பத்திரிகையாளரை பிடித்து நீங்க என்ன படத்தை பார்ப்பீங்க சொல்லுங்க என கேட்டதற்கு அவர் நான் இரண்டு திரைப்படத்தையும் பார்ப்பேன் எனக் கூற நீங்கள் மட்டும் தப்பித்துக் கொள்ள வேண்டும் நான் மட்டும் மாட்டிக்கணுமா நானும் இரண்டு திரைப்படத்தையும் தான் பார்ப்பேன் என மிகவும் கிண்டலாக கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.