santhanam biskoth movie collection viral:வெள்ளித்திரையில் காமெடியனாக இருந்து தற்போது ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சந்தானம்.
இவர் முதலில் காமெடியனாக தமிழ் திரையுலகில் நடிக்க ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து தற்போது ஹீரோவாகவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படங்களுக்கு இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்து வருகிறார்கள்.
அந்த வகையில் சென்ற வருடம் A1 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை தந்திருந்தது.
இதனையடுத்து திரையரங்குகள் திறக்கபட்டதும் தீபாவளியை முன்னிட்டு இவர் கதாநாயகனாக நடித்த பிஸ்கோத் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது.மேலும் ரசிகர்கள் இந்த படத்திற்காக நல்ல வரவேற்பை தந்து வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இப்படம் ஆறே நாட்களில் வசூல் வேட்டையிலும் அடித்து நொறுக்கி இருக்கிறது.
பிஸ்கோத்து திரைப்படம் ஆறு நாட்களிலேயே இந்திய அளவில் 2. 87கோடியில் மற்றும் உலக அளவில் 3.2 கோடி வரை வசூல் ஆகி இருக்கிறது.
மேலும் இந்த திரைப்படம் முதல் நாளில் மட்டும் 90 லட்சம் வரை வசூல் ஆகி இருக்கிறது என தகவல்கள் வெளிவந்துள்ளது.
இன்னும் எவ்வளவு வசூல் ஆகப்போகிறது என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.