உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள “டிப்ஸ்” கேட்ட சந்தானம் – கலாய்த்து விட்ட பிரபல நடிகர்.!

santhanam
santhanam

நடிகர் சந்தானம் சினிமா உலகில் தனது பயணத்தை தொடங்கிய போது காமெடி ஜாம்பவான்களாக இருந்த வடிவேலு, விவேக் போன்றவர்கள் பெரிய அளவு படங்களில் நடிக்காமல் இருந்ததால் அந்த சமயத்தில் தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார்.

ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத பிரபலமாக மாறி ஓடிக்கொண்டிருந்த சந்தானம் திடீரென என்ன நினைத்தாரோ அல்லது யாராவது ஒருவர்  சொல்லி தனது ரூட்டை திடீரென மாற்றிக் கொண்டாரோ என்னவோ தெரியவில்லை. சந்தானம் தொடர்ந்து ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார்.

இவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்களும் ஓரளவு வெற்றியை ருசித்த விடுகின்றன இப்பொழுது நல்ல இயக்குனருடன் கதையை கேட்டு நடிக்க ரெடியாக இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சினிமா உலகில் ஹீரோவான பிறகு உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என தனது நண்பரான ஆர்யாவிடம் கேட்டுள்ளார் அதற்கு நடிகர் ஆர்யா சொன்னது.

ஒரு டீ குடித்தால் எல்லாம் சரியாகிவிடும் காலை 4 மணிக்கு எழுந்து விடு போயிடலாம் என கூறி உள்ளார். ஆர்யாவை நம்பி  வீட்டுக்கு 4 மணிக்கு சென்றார் சந்தானம் அங்கு தான் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது நடிகர் ஆர்யா வீட்டில் இருந்து பல கிலோமீட்டர் தள்ளியிருக்கும் மகாபலிபுரம் வரை சைக்கிளில் பயணம் செய்து அங்கு டீ குடிக்க வேண்டும் என  சொல்லி சந்தானத்திற்கு ஷாக் கொடுத்துள்ளார்.

இதனை ஒரு மேடையில் சந்தானம் கலகலப்பாக கூறினார் அவ்வளவு தூரம் சைக்கிளில் சென்றதால் எனக்கு பசி அதிகமாகி விட்டது ஆனால் நடிகர் ஆர்யா எனக்கு ஒரே ஒரு டீ மட்டும் தான் வாங்கி கொடுத்தார் என பழைய நினைவுகளை  ஜாலியாக பகிர்ந்தார் சந்தானம்.