சைலண்டாக தில்லுக்கு துட்டு 3வது பாகத்தை அறிவித்த சந்தானம்.! அதிலும் மொட்ட ராஜேந்திரன் என்ட்ரி தான் கொடூரம்…

சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது தமிழ் சினிமாவில் டாப் காமெடி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் சந்தானம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நிலையில் இதனை அடுத்து அரை எண் 305ல் கடவுள், கண்ணா லட்டு தின்ன ஆசையா, இனிமே இப்படித்தான் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.

மேலும் இதனை அடுத்து தற்போது வரையிலும் ஹீரோவாக நடித்து வந்தாலும் இவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியினை தழுவி வருகிறது. பாக்ஸ் ஆபிஸிலும் பெரிதாக வசூலிட்டாமல் இருந்து வரும் நிலையில் இவரின் நடிப்பின் வெளியான தில்லுக்கு துட்டு படம் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனை அடுத்து தில்லுக்கு துட்டு 3வது பாகத்தில் நடித்து முடித்து இருக்கும் நிலையில் இந்த மாதம் ரிலீஸ் செய்யப் போவதாக சற்று முன்பு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தில் காமெடியாகவும் சந்தோஷ நாராயணன் இசையில் கானா பாடல்களிலும் கலக்கி இருந்தார். இது ஓரளவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது அதன் பிறகு ஹீரோவாக இவர் நடிப்பில் வெளியான டிக்கிலோனா, சபாபதி, ஏஜெண்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட படங்கள் மோசமான விமர்சனங்களை பெற்று தோல்வியினை அடைந்தது.

இவ்வாறு இயக்குனர் ராம் பாலா இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் தில்லுக்கு துட்டு முதல் மற்றும் இரண்டு பாகங்கள் வெளியான நிலையில் இந்த மாதம் ஜூலை 28ஆம் தேதி அன்று டிடி ரிட்டன்ஸ் என்னும் தலைப்பில் உருவாகி இருக்கும் தில்லுக்கு துட்டு மூன்றாவது பாகம் வெளிய போவதாக சந்தானம் அறிவித்துள்ளார்.

மேலும் நாளை இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்ற அறிவிப்பையும் தெரிவித்து இருக்கும் நிலையில் டீசரை தற்பொழுது வெளியிட்டுள்ளார் இது சந்தானத்தின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டீசர் மிகவும் காமெடியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்து வருகின்றனர்.