நடிகர் சந்தானம் விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலம் சினிமா உலகில் அறிமுகமானார் இவரின் காமெடி ஸ்டைல் வெகுவாக ரசிகர்களை கவர்ந்ததால் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி பயணித்தார்.
அதன் பிறகு வெள்ளித்திரையில் காமெடியனாக கலக்கி வந்தார், பின்பு நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்ற குறிக்கோளுடன் தனது நடிப்பு பயணத்தை ஹீரோ என்ற ரேஞ்சுக்கு உயர்த்தினார். இவர் ஹீரோவாக நடித்த சில திரைப்படங்கள் வெற்றி பெற்றன.
நடிகர் சந்தானம் நட்பு வட்டாரத்தில் மிகவும் முக்கியமான நண்பர் என்றால் டாக்டர் சேதுராமன், சந்தானம் இன்று வேணால் பெரிய நடிகராக இருக்கலாம் ஆனால் ஆரம்ப காலத்தில் சந்தானத்திற்கு மிகவும் பக்கபலமாக இருந்தவர் சேதுராமன் தான்.
சந்தானம் எப்படியாவது முன்னேறி ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நண்பர்களில் இவரும் ஒருவர், கண்ணா லட்டு திங்க ஆசையா என்ற திரைப்படத்தில் மூன்று ஹீரோக்களுடன் ஒரு ஹீரோவாக நடித்தவர்தான் டாக்டர் சேதுராமன், மேலும் வாலிப ரஜா, சக்க போடு போடு ராஜா ஆகிய திரைப்படங்களில் நடித்தவர்.
தமிழ் சினிமாவில் உள்ள அத்தனை நடிகர் மற்றும் நடிகைகளுக்கு தோல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் டாக்டராக வலம் வந்தவர் சேதுராமன், சேதுராமன் கடந்த மார்ச் 26 ஆம் தேதி திடீரென மரணமடைந்தார், இவர் மரணமடைந்த போது இவருக்கு வயது 36 தான்.
வெறும் 36 வருடத்திலேயே சேதுராமனின் வாழ்க்கை முடிந்து போனது அதனால் சேதுராமன் நண்பர்கள் மிகவும் வருத்தப்பட்டார்கள் சேதுராமனின் இறபபு சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சேதுராமன் பிறந்தநாள் அன்று சந்தானம் அவரது மருத்துவமனையில் zi கிளினிக் என்ற புதிய பிரான்ச் ஒன்றை ஈசிஆர் ரோட்டில் தொடங்கி வைத்துள்ளார் தன்னுடைய உயிர் நண்பன் உயிருடன் இல்லாததால் அவரின் புகைப்படத்திற்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் சந்தானம்.
இவரின் இந்த செயல் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. மேலும் பல ரசிகர்கள் இவருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து வருகிறார்கள்.