உதயநிதியுடன் மீண்டும் கூட்டணியில் சந்தானம்..! இணையத்தில் வெளியான அதிகாரபூர்வமான அறிவிப்பு..!

santhanam-123
santhanam-123

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் அரசியல்வாதியாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர்தான் உதயநிதி.இவ்வாறு பிரபலமான நமது நடிகர் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் சந்தானத்துடன் இணைந்து நடித்த அந்த காமெடி  திரைப்படம் ஆனது மாபெரும் வரவேற்பை பெற்று தந்தது.

இவர் வெளிவந்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சந்தானம் அவர்கள் காமெடி நடிகனாக நடிப்பது கிடையாது. அதற்கு பதிலாக தற்பொழுது கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்து கெத்து காட்டி வருவது மட்டுமில்லாமல் அவருடைய திரைப்படங்கள் அனைத்தையுமே  உதயநிதி அவர்கள் தன்னுடைய ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வாங்கி வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சந்தானம் அவர்கள் குளுகுளு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் உரிமையை தற்போது ரெட் ஜாயிண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனமானது  வாங்கி உள்ளது மட்டுமில்லாமல் இவை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திரைப்படம் ஆனது வருகின்ற 29ஆம் தேதி அனைத்து திரையரங்கிலும் வெளியிடப்படும் என உதயநிதி அவர்கள் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகை தன்யா  சந்தானத்திற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாக்கியராஜ், மனோபாலா, கோவை சரளா போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருவது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் ஆனது தமிழ் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக ரஜினி, கமல், விஜய்,சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்த ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமானது தற்போது சந்தானத்தின் படத்தையும் வேலை செய்ய ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் இருவரும் திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடிக்கிறார்களோ இல்லையோ இவர்கள் எப்படியோ ஒரு கூட்டணியில் ஈடுபட்டது போன்ற ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.