தமிழ் சினிமாவில் வெள்ளி திரை பிரபலங்கள் போல தற்போது சின்னத்திரையிலும் ஏராளமான காதல் ஜோடிகள் உருவாகி வருகிறார்கள் அந்த வகையில் சின்னத்திரையில் நிஜ வாழ்க்கையில் இணைந்து வாழும் ஒரு பிரபலம் என்றால் அது சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா தான்.
இவ்வாறு இவர்கள் இருவருமே பிரபல தனியார் தொலைக்காட்சி என விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலமாக ஜோடியாக நடித்து ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்தார். இவ்வாறு இந்த சீரியலில் தொடர்ந்து நடித்தவர் மூலமாக இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது மட்டுமில்லாமல் பின்னர் அது காதலாக மாறிவிட்டது.
இவ்வாறு திருமணம் முடிந்த பிறகு ஒரு மகன் மற்றும் மகளை பெற்றெடுத்த இந்த தம்பதிகள் என்றும் ரசிகர்களுக்கு ஃபேவரிட் ஆன பிரபலங்களாக இருந்து வருகிறார்கள் அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய மகள் பிறக்கும் நேரத்தில் பிரசவத்திற்காக ஆலியா மானசா தான் கமிட் ஆகியிருந்த ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் இருந்து விலகிவிட்டார்
ஆனால் இதனை தொடர்ந்து மீண்டும் நமது நடிகை சின்னத்திரையில் நடிப்பாரா என்பது கேள்விக்குறிதான். இப்படி இருக்கையில் ஆலியா மானசா கணவர் சஞ்சீவ் அவர்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று ஆலியா மானசா விற்கு பிறந்த நாள் தினம் கொண்டாடப்பட்டது அதுமட்டுமில்லாமல் அதே நாளில்தான் இவர்கள் இருவருக்கும் திருமணமும் நடைபெற்றது ஆகையால் திருமணம் மற்றும் பிறந்த நாள் ஆகிய இரண்டுமே ஒரே நாளில் வருவதன் காரணமாக இவற்றை மிக பிரபலமாக கொண்டாடி வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகர் சஞ்சீவ் அவர்கள் தன்னுடைய அழகு மனைவிக்கு பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துக் கூறும் வீடியோ சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.