தமிழ் தொலைக்காட்சியில் தொடர்ந்து ஏராளமான சீரியல்கள் அறிமுகமாகி வருகிறது அந்த வகையில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் ரசிகர்களை ஆண்டு வரும் தொலைக்காட்சி தான் சன் டிவி. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
மேலும் தமிழில் நம்பர் ஒன் தொலைக்காட்சியாகவும் இருந்து வரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் கயல். இந்த சீரியலில் இருந்து ஹீரோவாக நடித்து வரும் சஞ்சீவ் விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவருடைய ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சியில் இருந்து வருகிறார்கள்.
சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் கயல் இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் ரசிகர்கள் மற்றும் இல்லதரசிகளின் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து டிஆர்பியிலும் முன்னணி வகித்துவரும் நிலையில் இந்த சீரியலுக்கு என்று தனி ஒரு கூட்டம் இருந்து வருகிறது.
அதாவது இந்த சீரியல் குடும்ப செண்டிமெண்ட் மற்றும் காதல், பொறாமைப், போட்டியென அனைத்தையும் மையமாக வைத்து வருகிறது. மேலும் தனி பெண்ணாக இருந்து தன்னுடைய குடும்பத்தையே பார்த்துக் கொள்ளும் பெண்ணாகவும் இந்த சீரியலின் கதாநாயகியாகவும் சைத்ரா ரெட்டி கயல் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
வில்லியாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சீரியலில் நடித்து வந்த நிலையில் தற்போது இவர் சன் டிவியின் கயல் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் மேலும் குடும்பப் பாங்கான இவர் இந்த சீரியலில் செவிலியர் வேடத்தில் நடித்துள்ளார் மேலும் எப்படியும் தன்னிடம் அடி பணிந்து போக வேண்டும் என தன்னுடைய அண்ணன் குடும்பம் தன்னிடம் கையேந்தி நிற்க வேண்டும் என நினைக்கும் அவருடைய பெரியப்பாவை நாடாமல் தனி ஆளாக இருந்து அனைவரையும் காப்பாற்றுகிறாள்.
இவ்வாறு இப்படிப்பட்ட பெண்ணை காதலிக்கும் ஹீரோவாக சஞ்சீவ் நடித்த வருகிறார் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்து வந்த நிலையில் தற்போது கயல் சீரியலில் நடித்து வருகிறார். இவ்வாறு இந்த சீரியல் நன்றாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இவர் சீரியலில் காணப்படாத நிலையில் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகுவதாக சமூக வலைதளங்களில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வெளியிட்டு இது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பது போன்ற கேள்வி எழுப்பி உள்ளார் எனவே ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள்.