லக்னோ அணியை பல ஆயிரம் கோடி கொடுத்து வாங்கிய சஞ்சீவ் கோயங்கா.? இதற்கு முன்பும் IPL லில் ஒரு அணியை வாங்கியுள்ளாராம்.. எந்த அணி தெரியுமா.?

sanjeev
sanjeev

இந்தியாவில் ஆண்டுதோறும் கோலாகலமாக ஐபிஎல் சீசன் கள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 15 வது சீசன் அடுத்த வருடம் தொடங்குகிறது இதுவரை 8 அணிகள் மோதி வந்த நிலையில் தற்போது இரண்டு அணிகள் சேர்க்கப்பட்ட மொத்தம் 10 அணிகள் விளையாட இருக்கின்றன.

இதை BCCI அண்மையில் அறிவித்தது அதன்படி துபாயில் இரண்டு புது அணிகள் ஏலம் நடைபெற்றது. அடிப்படையாக இந்த ஏலம் சுமார் 2,000 கோடி என அறிவிக்கப்பட்டு அதிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. பிசினஸ்மேன்கள் கொண்டு அணியை வாங்க முயற்சித்தனர் சரியாக போட்டி போட்டு இரண்டு அணிகளும் தற்போது வாங்கியுள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரை மையமாக கொண்டு ஒரு ஆணியும் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் மையமாகக் கொண்டு ஒரு அணியும் உருவாக்கி உள்ளனர் இதில் லக்னோ அணி 7,090 கோடி ரூபாய்க்கு ஆர் பி எஸ் ஜி குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் கோயங்கா வாங்கியுள்ளார். அகமதாபாத் அணியை 5,600 கோடி ரூபாய்க்கு சிவிசி கேப்பிட்டல் அவர்கள் வாங்கி உள்ளது.

லக்னோ  அணியை தற்பொழுது வாங்கியிருக்கும் சஞ்சய் கோயங்கா இதற்கு முன்பாக 206ஆம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர் ஜியன்ட்ஸ் என்ற அணியின் தலைவராக இருந்தார் 2016ஆம் ஆண்டு இந்த அணி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் 2017 ஆம் ஆண்டு பைனல் வரை போய் மும்பை இடம் தோற்று வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போ இந்த அணியை வாங்கி உள்ளதால் சிறந்த வீரர்களை வைத்துக்கொண்டு கோப்பையை வெல்ல அதிகம் ஆர்வம் காட்டும் என கூறப்படுகிறது. சஞ்சீவ் கோயங்கா இந்திய சொத்து மதிப்பு படி 47405 கோடி உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கால்பந்து அணியையும் டேபிள் டென்னிஸ் அணியையும் வாங்கியுள்ள நிலையில் தற்போது ஐபிஎல்லில் ஒரு அணியை வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.