தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டு சந்தோஷம் அடையும்.. சீரியல் பிரபலம் சஞ்சீவ் -ஆல்யா மானசா ஜோடி.! என்னா அழகு.

aalya-manansa-and-sanjeev

சின்னத்திரையில் பிரபல ஜோடிகள் பலர் தனக்கு இணையான ஒரு நடிகர் நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்பு குடும்ப வாழ்க்கை மற்றும் சீரியல் என அவர்களது துறையில் சிறப்பாக பயணித்து வருகின்றனர். அப்படி மக்களுக்கு பரிச்சயமான ஜோடிகளில் இருவர் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா.

இவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடிகர் நடிகைகளாக நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானார். இந்த சீரியலில் இவர்கள் இணைந்து நடித்து வரும் போது ஒரு கட்டத்தில் காதலித்து வந்தனர். மேலும் ராஜா ராணி சீரியல் முடிந்த பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் இவர்களின் திருமணம் நடந்தபோது ஆல்யாவின் பெற்றோர்கள் இவர்களது திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை பின்பு ஆல்யாவிற்கு குழந்தை பிறக்க உள்ள நிலையில் இரண்டு குடும்பமும் ஒன்று சேர்ந்துள்ளனர். அப்படி முதலில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா ஜோடிக்கு அய்லா என்ற பின் பிறந்துள்ளார். பின்பு சில மாதங்கள் கழித்து சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் நடித்து வந்தார்.

இந்த சீரியல் முடிவடைந்ததை அடுத்து தற்போது சன் டிவியில் கயல் சீரியலில் நடித்து வருகிறார். மேலும் ஆலியா மானசாவும் ராஜா ராணி சீசன் 2 என்ற சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதையடுத்து ஆலியா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ள நிலையில் ராஜா ராணி தொடரில் தொடர்ந்து நடித்து வந்த ஆல்யா குழந்தை பிறக்க உள்ள அந்த மாதத்தில் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.

அவருக்கு பதில் தற்போது ரியா என்ற பிரபலம் நடித்து வருகிறார். இந்தநிலையில் ஆல்யாவிற்கு இரண்டாவது குழந்தையாக அர்ஷ் என்ற மகன் பிறந்து உள்ளார். இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதை அடுத்து சஞ்சீவ் மற்றும் ஆலியா  மகிழ்ச்சியாக இருந்து வரும் நிலையில் சஞ்சீவ் அவரது மகனின் கையை புகைப்படம் எடுத்து அதனை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.

aalya-manansa-and-sanjeev
aalya-manansa-and-sanjeev
aalya-manansa-and-sanjeev
aalya-manansa-and-sanjeev
aalya-manansa-and-sanjeev