விக்ரம் படத்தில் சூர்யா மிரட்டியது போல் ஜவான் படத்தில் கேமியோ ரோலில் யார் மிரட்டி உள்ளார் தெரியுமா.?

jawan
jawan

Jawan Movie: இன்று கிருஷ்ணஜெயந்தி ஸ்பெஷல்லாக உலகம் முழுவதும் ஜவான் திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் நிலையில் இந்த படத்தில் லியோ பட நடிகர் கேமியோ ரோலில் நடித்திருப்பது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தினை ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனம் ரெட் சில்லிஸ் தயாரித்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான ஜவான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டி உள்ளார். ஜவான் படத்தில் விஜய்யின் லியோ திரைப்படத்தில் நடித்து வரும் முக்கிய பிரபலம் கேமியா ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இன்னும் சில நாட்களில் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் தனது 68வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இவ்வாறு தளபதி விஜய் தான் ஜவான் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பார் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வந்த நிலையில் ஆனால் விஜய் கேமியோ ரோலில் நடிக்கவில்லை என்பதை அட்லீ உறுதி செய்தார். ஆனால் விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் வில்லன் சஞ்சய் தத் ஜவான் படத்தில் கேமியோ ரோலில் நடித்து அசத்தியுள்ளார். இவருடைய என்ட்ரி மாஸாக இருக்க திரையரங்குமே அதிர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.