விறுவிறுப்பாக ஷூட்டிங்கை முடித்த சஞ்சய் தத்.. “லியோ” படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் எங்கு தெரியுமா.? வெளிவந்த அனல் பறக்கும் தகவல்

leo
leo

அண்மை காலமாக இளம் இயக்குனர்கள் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து அதிக வசூலை அள்ளி வருகின்றன. அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுவரை இயக்கிய நான்கு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் தான். முதலில் இவர் “மாநகரம்” என்னும் திரைப்படத்தை எடுத்து அறிமுகமானார். அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கும் கார்த்தியை வைத்து கைதி, விஜயை வைத்து மாஸ்டர், கமலை வைத்து விக்ரம் போன்ற படங்களை எடுத்தார்.

அந்த படங்கள் அனைத்தும்  மிகப்பெரிய ஹிட் அடித்து எதிர்ப்பாராத அளவுக்கு வசூலை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து லோகேஷ் தளபதி விஜயுடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து “லியோ” படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன்..

மன்சூர் அலிகான், பிக் பாஸ் ஜனனி  மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் வெற்றிகரமாக முடிந்தது அடுத்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் கடும் குளிர் என்று கூட பார்க்காமல் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது அங்கு வருகின்ற மார்ச் 25ஆம் தேதி உடன் ஷூட்டிங் முடியும் என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது கட்ட சூட்டிங் எங்கு நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வந்த நிலையில் அதற்கான விடையும் தற்போது கிடைத்துள்ளது. அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. நடிகர் சஞ்சய் தத் அண்மையில் தான் லியோ படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் காஷ்மீரில் அவருடைய ஷூட்டிங் முடிந்து உள்ளதை எடுத்து லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒரு பதிவை போட்டு உள்ளது அதில் சொன்னது. சஞ்சய் தத் தேங்க்யூ சார் ஸ்வீட் அண்ட் டவுன் டு எர்த் பர்சன் என பதிவிட்டது மேலும் அடுத்த கட்ட ஷூட்டிங் சென்னையில் உள்ளது அப்பொழுது பார்ப்போம் என கூறி இருக்கிறது. இதோ அந்த தகவலை நீங்களே பாருங்கள்.