சினிமாவில் அறிமுகமாகி உள்ள அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை மிரள வைத்து வருகிறார்கள்.
அந்த வகையில் எருமை சாணி என்ற யூடியூப் சேனலின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார் தொகுப்பாளினி ஹரிஜா.இதன் மூலம் பிரபலமானார். இவரின் காமெடி திறமையினால் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.
இந்த யூடியூப் சேனலில் மூலம் இவரை எருமை சாணி என்று இன்று வரையிலும் அழைத்து வருகிறார்கள். இந்நிலையில் இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இந்நிலையில் இவர் யூடியூப் சேனலின் மூலம் பிரபலமடைந்து பிறகு வெள்ளித்திரையிலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து இயக்குனர் ரமேஷ் வெங்கட் இயக்கத்தில் வெளிவந்த ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் தற்போது ஹரிஜா கொசு வலையில் இருக்கும் அழகிய புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.