ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்துக் கொண்ட சங்கீதா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவரா.? பலருக்கும் தெரியாத அந்த விஷயம்

Redin Kingsley Marriage
Redin Kingsley Marriage

Redin Kingsley Marriage: பிரபல காமெடி நடிகர் சமீபத்தில் சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துக் கொண்ட நிலையில் சங்கீதா குறித்த முக்கியமான தகவல் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரெடின் கிங்ஸ்லி மற்றும் சீரியல் நடிகை சங்கீதா இவர்களுடைய திருமணம் டிசம்பர் 10ஆம் தேதி அன்று சிம்பிளாக நடைபெற்றது.

இவருடைய திருமணத்தில் பெரிதாக பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை குறுகிய வட்டாரத்திலேயே தங்கள் திருமணத்தை முடித்துக் கொண்டனர். நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ரெடி கிங்ஸ்லி இந்த படத்தின் மூலம் தொடர்ந்து டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்.

முதல்ல இயக்குனர், அப்புறம் தயாரிப்பாளர், கேமராமேன், கடைசியாக தான் ஹீரோ இப்படி 15 நாள் அட்ஜஸ்ட்மென்ட்க்கு வந்தா பட வாய்ப்பு..? பிரபல நடிகையை குத்தகைக்கு கேட்ட இயக்குனர்….

தற்பொழுது ரசிகர்களுக்கு பிடித்த நகைச்சுவை நடிகராக இருந்து வரும் ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதா மராத்தி மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் மாஸ்டர் மற்றும் பாரிஸ் ஜெயராஜ் போன்ற திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் சன் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் ரசிகர்களை கவர்ந்த சங்கீதா மற்றும் ரெடின் கிங்ஸ்லி இருவரும் சில வருடங்களாக காதலித்து வந்ததாகவும் எனவே திடீர் முடிவு எடுத்து இவர்கள் மைசூரில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவர்களுடைய திருமண புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இந்த பக்கம் பார்த்தா ராஷ்மிகா மந்தனா.. அந்த பக்கம் பார்த்தா கீர்த்தி சுரேஷ்.. அச்சு அசல் அவர்களைப் போலவே இருக்கும் நடிகை.! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

இந்நிலையில் ரெடின் கிங்ஸிலியின் மனைவி சங்கீதாவிற்கு ஏற்கனவே 2009ஆம் ஆண்டு கிரிஷ் என்பவர் உடன் திருமணம் நடைபெற்று விட்டதாகவும் மகிழ்ச்சியாக இருந்து வந்த இவர்கள் குடும்ப பிரச்சினை காரணமாக சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்ற பிரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சங்கீதாவுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.